மாற்றுத் திறனாளியை தாக்கிய மாவீரன் புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளருக்கு பிணை..!

ஆசிரியர் - Editor I
மாற்றுத் திறனாளியை தாக்கிய மாவீரன் புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளருக்கு பிணை..!

மாற்று திறனாளியான பொதுமகனை தாக்கிய குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளர் ஒரு லட்சம் ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளாா். 

குறித்த வழங்கு இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் துணுக்காய் சுற்றுலா நீதிமன்றில் இடம்பெற்றது. 

குறித்த சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் நீதிமன்றில் வழங்கு தொடர்ந்திருந்தனர். குறித்த மாற்றுத்திறனாளியான பொதுமகனை தாக்கிய சம்பவம் தொடர்பிலான 

காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வேகமாக பரவியிருந்தது. குறித்த தாக்குதல் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட நபர் கிளிநொச்சி வை்ததியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார். 

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் புதுக்குடியிருப்பு தவிசாளர் மீது வழக்க தொடர்ந்திருந்தனர். குறித் வழக்கை இன்று மன்னில் எடுத்துக்கொண்ட நீதவான் 

குறித்த சந்தேக சபரான புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளரை 1 லட்சம் பெறுமதியான பிணையில் செல்லுமாறும் உத்தரவிட்டார். 

குறித்த வழக்கில் தோன்றிய சட்டத்தரணி செலஸ்ரின் பாதிக்கப்பட்ட நபரின் சார்பில் வாதாடினார். குறித்த பிரதேச சபை தவிசாளரின் செயல் அசுரன் திரைப்படத்தை பார்த்ததன் பின்னர் 

நடந்துகொண்டமை போன்றதானது என திறந்த நீதிமன்றில் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்தார். மாற்றுத்திறனாளியான குறித்த பொதுமகனை தாக்கியமையானது 

பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் குற்றம் என கருதப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டம் எனவும் சட்டத்தரணி தனது வாதத்தினை முன்வைத்தார்.

குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி குறித்த பிரதேச சபை தவிசாளரை பிணையில் விடுவித்தார். குறித்த வழக்கின் விசாரணை எதிர்வரும் 10.12.2019 அன்று 

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. இதேவேளை குறித்த நபர் பிரதேச சபை தவிசாளரை அச்சுறுத்தியதாக தெரிவித்து குறித்த பொதுமகன் மீது 

பொலிசார் மற்றுமொரு வழக்குத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு