7 மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்..! பாடசாலை ஆசிாியருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு..

ஆசிரியர் - Editor
7 மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்..! பாடசாலை ஆசிாியருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு..

கொத்மலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 7 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் ஆசிாியரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொத்மலை ஹெல்பொட சுற்றுலா நீதிமன்றத்தில் நீதவான் சாந்தனி மீகொட முன்னிலையில் சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 23 ஆம் திகதி வரை 

விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொத்மலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 7 மாணவிகளும் சட்ட மருத்துவ பரிசோதனைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Radio
×