தாயாருக்கு உருக்கமான கடிதம்..! தற்கொலை செய்து கொண்ட 18 வயது மாணவன். முல்லைத்தீவில் சம்பவம்..

ஆசிரியர் - Editor
தாயாருக்கு உருக்கமான கடிதம்..! தற்கொலை செய்து கொண்ட 18 வயது மாணவன். முல்லைத்தீவில் சம்பவம்..

முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் 18 வயதான பாடசாலை மாணவன் ஒருவன் தாயாருக்கு கடிதம் ஒன் றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். 

யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.முள்ளியவளை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் 

நேற்று செவ்வாய்கிழமை பகல் 2 மணியளவில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். சற்று நேரத்தில் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரை மாய்ப்பதற்கு முன்பாக தாயாருக்கு கடிதமொன்றை எழுதி வைத்துள்ளார்.சிறு வயது முதல் தந்தை இன்றி தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து முல்லைதீவு பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Radio
×