மகனையும், மனைவியையும் காப்பாற்ற உயிரைவிட்ட கணவன்..! திருகோணமலையில் சோகம்..

ஆசிரியர் - Editor
மகனையும், மனைவியையும் காப்பாற்ற உயிரைவிட்ட கணவன்..! திருகோணமலையில் சோகம்..

திருகோணமலை மட்கோ பகுதியில் ரயில் தண்டவாளத்தில் ஓடிய மகனை காப்பாற்றுவதற்காக சென்ற மனை வியையும், மகனையும் காப்பாற்றிவிட்டு தந்தை உயிாிழந்த சோகம் நேற்று இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை-அபயபுர, ரயில்வே லைன் பகுதியைச் சேர்ந்த என் ஜோஹான் ஜோசப் (27 வயது) எனவும் தெரியவருகின்றது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது.

உயிரிழந்தவரின் குழந்தை ரயில் வீதிக்கு சென்றபோது மகனை பிடிப்பதற்காக அவரது மனைவி ரயில் தண்டவாளத்துக்கு அருகே சென்றதாகவும், மகனையும் மனைவியையும் காப்பாற்றுவதற்காக 

சென்ற கணவர் ரயிலி மோதியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை 

பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Radio
×