8 நாட்கள் காணாமல்போயிருந்த ஆசிாியை நீா்தேக்கத்தில் சடலமாக மீட்பு..!

ஆசிரியர் - Editor
8 நாட்கள் காணாமல்போயிருந்த ஆசிாியை நீா்தேக்கத்தில் சடலமாக மீட்பு..!

கம்பளை- கீறப்பனை பகுதியில் காணாமல்போன ஆசிாியை நீா்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருப் பதாக பொலிஸாா் கூறியிருக்கின்றனா். 

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் கம்பளை கீரப்பனை பிரதேசத்தில் தனது வீட்டுக்கு நூறு மீற்றர் தூர இடைவெளிக்குள் காணாமல் போன பட்டதாரி ஆசிரியயையே எட்டு தினங்களின் பின்னர் 

நேற்று (08) காலை விட்டோரியா நீர்த் தேக்கப் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேற்படி சடலத்தை ஆசிரியையின் உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

கம்பளை கீரப்பனையைச் சேர்ந்த நிஸன்சலா என்ற 27 வயதுடைய குறித்த பட்டதாரி ஆசிரியை சம்பவதினமான கடந்த முதலாம் திகதி பாடசாலையிலிருந்து வெளியேறியபோதும் 

வீடு வந்து சேராததையடுத்து உறவினர்கள் கம்பளைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

Radio
×