இரு குழுக்களுக்கிடையில் மோதல்..! ஒருவா் பலி, 7 போ் படுகாயம்..

ஆசிரியர் - Editor
இரு குழுக்களுக்கிடையில் மோதல்..! ஒருவா் பலி, 7 போ் படுகாயம்..

ஆனமடுவ பள்ளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவா் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், 7 போ் படுகாய மடைந்திருக்கின்றனா். 

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.மோதலில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 

அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 35 வயதான ஒருவரே 

உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு 

வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Radio
×