SuperTopAds

பெற்றோா் இல்லை, வறுமை, அடிப்படை வசதிகளற்ற கிராமம் மற்றும் பாடசாலை..! சாதித்து காட்டிய மாணவி. இதுதான் சாதனை..

ஆசிரியர் - Editor I
பெற்றோா் இல்லை, வறுமை, அடிப்படை வசதிகளற்ற கிராமம் மற்றும் பாடசாலை..! சாதித்து காட்டிய மாணவி. இதுதான் சாதனை..

பெற்றோரை இழந்து அம்மம்மா மற்றும் ஒரு காலை இழந்த தாத்தாவின் அரவணைப்பில் வாழ்ந் து வரும் ஒட்டுசுட்டான் அலைகல்லுபோட்டகுளம் மாணவி தரம் 5 புலமை பாிசில் பரீட்சையில் 157 புள்ளிகளை பெற்று உண்மையான சாதனையை நிகழ்த்தியுள்ளாா். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் வலயத்தில் ஒட்டுசுட்டான் கோட்டத்தில் அமைந்துள்ள. மு/அலைகல்லுப்போட்டகுளம் அ.த.க.பாடசாலை மாணவி செல்வி. ஜெயராசசிங்கம் அகலிசை 2019 தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சையில் 157 புள்ளிகளை  சித்தியடைந்துள்ளாா்.

இந்த சித்தி அலைகல்லுப்போட்டகுளம் அ.த.க பாடசாலை வரலாற்றில் முதல் சாதனையாம்.  போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பகுதியில் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலையில் 

இரண்டு ஆசிரியர்களும் மொத்தமாக ஆறு (06) மாணவர்களே கல்வி கற்று வருகின்றனர். அடிப்படை வசதிகள் கூட போதியளவு இல்லாமல் கிடைக்கப்பெற்ற வளங்களை வைத்துக்கொண்டு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய பாடசாலை அதிபர், 

ஆசிரியர்களின் அயராத முயற்சியினால் இச்சாதனை நிலைநாட்டப்பட்டது. மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவி 60 வயதான அம்மம்மாவினுடைய அரவணைப்பிலேயே வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு மாணவியின் அம்மப்பா போரில் தனது ஒரு காலை இழந்த நிலையில் யானை தாக்குதலுக்கும் உள்ளாகி தனது 62 ஆவது வயதில் தனது இரண்டு பேத்திகளையும் கல்வியில் உயர்த்துவதற்காக கூலி தொழிலுக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில் இந்த மாணவி மற்றும் இவருடைய அக்கா ஆகிய இருவரையும் கற்பித்து கல்வியில் சிறந்து விளங்குவதற்கு உதவுமாறு கோருகின்றார். இந்நிலையில் தாய் தந்தை இன்றி வயதான அம்மப்பா அம்மம்மா ஆகியோரின் அரவணைப்பில் வாழ்ந்து சாதித்த 

இந்த மாணவி தான் ஒரு வைத்தியராக வந்து எமது கிராம மக்களுக்கு சேவையாற்றுவதே எமது நோக்கம் என்கிறார். இந்த மாணவியின் இலட்சியம் நிறைவேற உதவும் உள்ளங்கள் முன்வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.