கண்டியில் நடந்த குழந்தை வியாபாரம்..! 7 போ் இதுவரையில் கைது.. பதைபதைக்கும் பின்னணி..

ஆசிரியர் - Editor I
கண்டியில் நடந்த குழந்தை வியாபாரம்..! 7 போ் இதுவரையில் கைது.. பதைபதைக்கும் பின்னணி..

கண்டி மாவட்டத்தில் நீண்ட நாட்களாக நடந்துவந்த குழந்தை வியாபாரம் தொடா்பாக பொலிஸா ருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து 47 வயதுடைய பெண் பிறந்து 20 நாட்களேயான குழந் தையுடன் கைது செய்யப்பட்டிருக்கின்றாா். 

கடந்த ஒருவருட காலமாக இரகசியமான முறையில் சிசுக்களை விற்பனை செய்து வருவதாகக் கண்டி சிறுவர் பாதுகாப்பு காவல்துறை பெண்கள் பிரிவின் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கிட்டியுள்ளது. இந்நிலையில் பிறந்து 20 நாட்களேயான சிசுவை 

40 ஆயிரம் ரூபாவிற்கு வாங்கியதாகக் கண்டி கட்டுகலை பகுதியில் உள்ள 47 வயதுடைய பெண்ணொருவர் சிசுவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பொலிஸ் சிறுவர் பாதுகாப்பு பிரிவின் உயர் அதிகாரி, சந்தேக நபரை விசாரித்த போது, 

குறித்த அக்குழந்தையை 40 ஆயிரம் ரூபாவிற்கு பெற்றதாகவும் சந்தேக நபருக்குக் குழந்தைகள் இல்லாததால் அவர் பணம் கொடுத்து குழந்தையை வாங்கியதாகவும் இது விடயமாகக் கண்டி மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரி மற்றும் வலய பொறுப்பதிகாரியின் 

பணிப்புரையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர் சிசுவை கம்பளை வைத்தியசாலை பகுதியில் நபரொருவரிடம் மேற்படி பணம் கொடுத்துப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுத் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு