உங்களை சந்திக்கவேண்டும்..! கோட்டபாய, சுமந்திரன் தொலைபேசியில் காரசாரம்..

ஆசிரியர் - Editor I
உங்களை சந்திக்கவேண்டும்..! கோட்டபாய, சுமந்திரன் தொலைபேசியில் காரசாரம்..

தமிழ்தேசிய கூட்டமைப்புடன் தானும் தன் சகோதரா்களும் பேச விரும்புவதாக ஜனாதிபதி வேட் பாளா் கோட்டாபாய ராஜபக்ச தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சு மந்திரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு கேட்டிருக்கின்றாா். 

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் அன்றாட - அவசர நெருக்கடி ஆகியவற்றுக்கான தீர்வுகளாக நீங்கள் முன்வைக்கக்கூடிய யோசனைகள் தொடர்பில் உங்களிடம் ஒரு தெளிவான திட்டம் இல்லாமல் சந்தித்துப் பேசுவதில் பலன் கிடையாது.

என சுமந்திரன் எம்.பி. நேரடியாகவே கோத்தபாயவுக்கு சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு தடவைகள் மஹிந்த ராஜபக்சவுடன் சந்தித்துப் பேசி விட்டேன். ஆனால், அவர் உருப்படியான -  தெளிவான யோசனைத் திட்டம் எதையும் வெளிப்படுத்தவில்லை 

என்ற அதிருப்தியையும் கோத்தபாயவுக்கு சுமந்திரன் எம்.பி. தெரியப்படுத்தினார்.அப்படியான யோசனைகள் குறித்துப் பேசித் தீர்மானிக்கவே நாங்கள் மூவரும் (மஹிந்த, பஸில், கோத்தா) உங்கள் தரப்பைச் சந்தித்துப் பேச விரும்புகின்றோம் 

னக் கோத்தபாயவால் பதிலளிக்கப்பட்டது. நீங்கள் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் போகின்றீர்கள். அதற்கு முன்னர் சந்திக்கலாமா அல்லது நீங்கள் சிங்கப்பூர் சென்று திரும்பிய பின்னர் சந்திக்கலாமா?" என சுமந்திரன் எம்.பி. கோத்தபாயவிடம் வினவியுள்ளார்.

சகோதரர்கள் மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச ஆகியோரின் நேர வசதியை அறிந்துகொண்டு மீண்டும் சுமந்திரனுடன் தாம் தொடர்பு கொள்வார் எனக் கோத்தபாய இதன்போது பதிலளித்துள்ளார். தமிழர் தரப்புடன் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுப்பதற்கு 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச, அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச, அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச ஆகிய மூவரும் தீர்மானித்திருக்கின்றார்கள் என்று அவர்கள் தரப்புத் தகவல்கள் 

தெரிவித்தன என்று தமிழ்ப் பத்திரிகை ஒன்று  இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு