மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தீா்மானம் குப்பையில்..! செஞ்சோலை காணியில் குடியிருக்கும் ஏதிலி மக்கள் நடுத்தெருவில்..

ஆசிரியர் - Editor I
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தீா்மானம் குப்பையில்..! செஞ்சோலை காணியில் குடியிருக்கும் ஏதிலி மக்கள் நடுத்தெருவில்..

கிளிநொச்சி- மலையாளபுரம் கிராமத்தில் உள்ள செஞ்சோலை காணியில் குடியிருக்கும் மக்க ளை இம் மாதம் 15ம் திகதிக்கு முன்னா் அங்கிருந்து வெளியேறுமாறு கரைச்சி பிரதேச செயலக ம் பணித்திருக்கின்றது. 

குறித்த காணியின் உரிமையாளர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டிற்கமைவாக குறித்த நடவடிக்கைகள் தற்புாது மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த காணியில் செய்சோலை சிறுவர் இல்லம் அமைந்திருந்த அதேவேளை, 

யுத்தம் நிறைவுற்று மீள்குடியேறிய போது குறித்த காணியில் படையினர் முகாம் அமைத்திருந்தனர்.குறித்த காணியை படையினர் விடுவிப்பு செய்ததை அடுத்து காணியில் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த பிள்ளைகள் 

குடும்பமாகிய நிலையில் தமது குடும்பத்தினருடன் குடியேறினர். 54 குடும்பங்கள் குறித்த காணியில் வாழந்து வந்த நிலையில் குறித்த காணியில் கொட்டகைகளை அமைத்து அவர்கள் தமது வாழ்க்கையை முன்னெடுத்து வந்தனர்.

இந்த நிலையில் குறித்த காணியினை செஞ்சோலையிலிருந்து வளர்ந்து குடும்பங்களாக அங்கு குடியேறியுள்ள மக்களிற்கே பகிர்ந்தளிக்க வேண்டும் என கடந்த 11.04.2019 அன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு 

கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிலை இவ்வாறு இருக்க குறித்த காணியினை உரிமைகோரி 16 குடும்பங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இவ்விடம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தனர். 

காணி ஆவணங்களை சமர்ப்பித்திருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பிரதேச செயலகத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சூழலில் குறித்த காணியை விட்டு வெளியேறுமாறும், 

இல்லையேல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பிரதேச செயலகத்தினால் நேற்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த காணியில் குடியமர்ந்துள்ள செஞ்சோலை பிள்ளைகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு