பொறுப்புவாய்ந்தவா்களின் பொறுப்பற்றதனம் வாழ்வாதாரத்தை இழக்கும் குமுழமுனை இறால் தொழிலாளா்கள்..!

ஆசிரியர் - Editor I
பொறுப்புவாய்ந்தவா்களின் பொறுப்பற்றதனம் வாழ்வாதாரத்தை இழக்கும் குமுழமுனை இறால் தொழிலாளா்கள்..!

குமுழமுனை சிறுகடலில் கழிவுகள் கொட்டப்படுவதாலும், சட்டவிரோதமாக மீன்பிடி இடம்பெறு வதாலும் தாம் பொிதும் பாதிக்கப்படுவதாக இறால் தொழிலாளா்கள் வமாகாணசபை முன்னாள் உறுப்பினா் ரவிகரனிடம் சுட்டிக்காட்டியுள்ளனா். 

இது தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியிருந்தும், இதுவரை எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர். இந் நிலையில் அந்த சிறுகடலில் பாரம்பரியமாக இறால் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும், 

உதயசூரியன் மீனவ கூட்டுறவுச்சங்கத்தினைச் சேர்ந்தவர்கள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை 05.10.2019அன்று அழைத்து, தமது பாதிப்பு நிலைமைகளை அவரிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.

அக் கலந்துரையாடலில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், குறிப்பாக நூறிற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இச் சிறுகடலில் பாரம்பரிய இறால் பிடியில் ஈடுபட்டு வருகின்றபோதும், அதிலும் நாற்பதிற்கும் அதிகமான குடும்பங்கள், 

மிகவும் வறுமைப்பட்ட பெண்தலைமைத்துவக் குடும்பங்களாகும். இடப்பெயர்விற்குப் பிற்பாடு இச் சிறுகடலில் கூட்டுவலை, இழுப்பு வலை போன்ற சட்டவிரோத தொழில்களில் வெளிமாவட்ட, மற்றும் வெளி பிரதேசத்தவர்கள் ஈடுபட்டு வருவதால் பாரம்பரிய இறால் பிடியில் 

ஈடுபடுபவர்கள் தமது தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாரம்பரிய இறால் பிடியில் ஈடுபடுபவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதுடன், தாம் தொழில் இன்றி கடனாளிகளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

இதே வேளை குறித்த சிறு கடலினுள் தற்போது அதிகமாக குப்பைகள் கொட்டப்படுவதாலும் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் பாரம்பரிய இறால் பிடியில் ஈடுபடுபவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பில் உரியவர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தும் எவரும், 

இதற்கு உரியநடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் கவலை தெரிவித்தனர். அவர்களின் பாதிப்பு நிமைகளைக் கேட்டறிந்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட நீரியல்வளத் திணைக்களத்தின், 

கடற்றொழில் பரிசோதகருடன் தொடர்பினை ஏற்படுத்தி, இது தொடர்பில் அவரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார். இது தொடர்பில் தாம் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாக கடற்றொழில் பரிசோதகரால் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை குப்பைகள் கொட்டப்படுவது தொடர்பில், உரிய பகுதிக்குரிய பிரதேசசபை உறுப்பினருக்கு ரவிகரன் அழைப்பினை ஏற்படுத்தி தெரிய்படுத்தியிருந்தார். அது தொடர்பில் தாம் கவனம் செலுத்துவதாக குறித்த பிரதேசசபை உறுப்பினராலும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள், விரைவில் எடுக்காவிட்டால், மக்கள் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குவார்கள். 

அவர்களுக்கு துணையாக நானும் இருப்பேன் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு