ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் எம்.ஜீ.ஆா் வேடத்தில் நடிக்கிறாா் அரவிந்சுவாமி..!

ஆசிரியர் - Editor
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் எம்.ஜீ.ஆா் வேடத்தில் நடிக்கிறாா் அரவிந்சுவாமி..!

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் பிரபல தமிழ் சினிமா நடிகருமான எம்.ஜீ.ஆா் வேடத்தில் நடிப்பதற்கு பிரபல நடிகா் அரவிந்சுவாமி ஒப்பந்தமாகியுள்ளாா். 

ஏ. எல். விஜய் இயக்கத்தில் பொலிவூட் நடிகை கங்கான ரனாவத் நடிக்கும் ‘தலைவி’ படத்தில், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அரவிந்த்சாமி ஒப்பந்தமாகியுள்ளாா். 

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகவிருக்கும் திரைப்படம் ‘தலைவி’. இந்தப்படத்தில் 

ஜெயலலிதாவாக பொலிவூட்நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். ஜெயலலிதாவின் திரையுலக வாழ்க்கையிலும், அரசியல் வாழ்விலும் தவிர்க்க முடியாத வழிகாட்டியாகத் 

திகழ்ந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். இவ்விரண்டு தலைவர்களும் இணைந்து , இருபத்தைந்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நாயகன் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். 

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய் எம்.ஜி.ஆராக நடிக்க நடிகர் அரவிந்த்சாமியைத் தெரிவு செய்திருக்கிறார். 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இப்படத்தில் 

நடிகை கங்கான ரனாவத், நான்கு வித தோற்றங்களில் நடிப்பதற்காக ஹொலிவூட் சென்று ஒப்பனை கலைஞரைச் சந்தித்திருக்கிறார். 

அத்துடன் பரத நாட்டியத்தையும் கற்று வருகிறார். நடிகர் அரவிந்த்சாமி தற்போது வெற்றிகரமாகப் பட மாளிகையில் ஓடிக்கொண்டிருக்கும் 

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்த ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற படத்திற்குத் தமிழில் அவருக்குப் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் என்பதும்,

‘ புலனாய்வு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Radio
×