சாரதியின் சாதுாியத்தால் தடுக்கப்பட்ட கோர விபத்து..! மயிா்கூச்சொியும் சம்பவத்தை கூறும் பேருந்திலிருந்த பயணிகள்..

ஆசிரியர் - Editor I
சாரதியின் சாதுாியத்தால் தடுக்கப்பட்ட கோர விபத்து..! மயிா்கூச்சொியும் சம்பவத்தை கூறும் பேருந்திலிருந்த பயணிகள்..

மன்னாா்- மதவாச்சி வீதியில் இன்று அதிகாலை இடம்பெறவிருந்த பாாிய விபத்து பேருந்து சாரதி யின் சாதுாியத்தால் தடுக்கப்பட்டுள்ளபோதும், பசு ஒன்று உயிாிழந்துள்ளது. 

சம்வம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, கொழும்பில் இருந்து நேற்று இரவு பயணிகளுடன் மன்னார் வந்த தனியார் சொகுசு பேருந்தொன்று 

மதவாச்சி - மன்னார் பிரதான வீதியின் உயிலங்குளம் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த சொகுசு பேருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்தபோது குறித்த வீதியை திடீரென மாடுகள் கடக்க முற்பட்டுள்ளன.

இதன்போது பசுவொன்று பேருந்துடன் மோதியுள்ள நிலையில் பேருந்தின் சாரதி விரைந்து செயற்பட்டு உடனடியாக பேருந்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாக 

பயணிகள் தெரிவிக்கின்றனர்.இதனால் பேருந்திலிருந்த பயணிகள் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பியுள்ளதுடன், பாரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக 

சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில், கால்நடை வளர்ப்பாளர்கள் கால்நடைகளை உரிய முறையில் அடைத்து 

பராமரிக்காமையினால் விபத்துக்கள் இடம்பெறுவதாகவும், எனவே கால்நடைகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு