ஜனாதிபதி தோ்தல் அறிவிக்கப்பட்டது சட்டத்திற் முரண்..! தடையுத்தரவுகோாி உச்ச நீதிமன்றில் றீட் மனு தாக்கல்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி தோ்தல் அறிவிக்கப்பட்டது சட்டத்திற் முரண்..! தடையுத்தரவுகோாி உச்ச நீதிமன்றில் றீட் மனு தாக்கல்..

ஜனாதிபதி தோ்தலுக்கான அழைப்பு சட்டவிரோதமான முறையில் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தோ்தலுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்ககோாியும் உச்ச நீதிமன்றில் றீட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. 

காலி மாநகர சபையின் முன்னாள் மேயரான என்.ஜி.மெத்சிரி டி சில்வா இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.இதனடிப்படையில் மனுவில் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஆணைக்குழு உறுப்பினர்களை 

மனுதாரர் குறிப்பிட்டிருக்கின்றார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6 வருடங்களுக்காகவே மக்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐந்து வருடங்கள் மாத்திரம் கடந்துள்ள பின்னணியில், தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை விடுத்து, எதிர்வரும் 7ஆம் திகதி வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் இந்த தீர்மானமானது, அரசியலமைப்புக்கு முரணானது என சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை 

ரத்து செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.அத்துடன், எதிர்வரும் 7ஆம் திகதி வேட்பு மனு ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கையை தடை செய்யும் வகையில் இடைகால தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் மனுதாரர் தனது மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு