யாழ்.பல்கலைகழக துணைவேந்தா் பதவிக்கு 4 போ் விண்ணப்பம்..! இருவா் புலம்பெயா் தமிழ் பேராசிாியா்களாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக துணைவேந்தா் பதவிக்கு 4 போ் விண்ணப்பம்..! இருவா் புலம்பெயா் தமிழ் பேராசிாியா்களாம்..

யாழ்.பல்கலைகழக துணைவேந்தா் பதவிக்கு இன்றுவரை 4 போ் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பியிருக்கின்றனா். இதேவேளை 7ம் திகதியுடன் விண்ணப்ப திகதி நிறைவடையவுள்ளது. 

இவர்களில் இருவர் புலம்பெயர் தமிழ்ப் பேராசிரியர்கள் ஆவர்.ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த பேராசிரியர் கே. நிரஞ்சன, ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் சாம். 

தியாகலிங்கம் ஆகியோரே வெளிநாடுகளில் இருந்தவாறு யாழ். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருக்கின்றனர்.

இவர்களோடு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சேவையாற்றும் பேராசிரியர்கள் கலாநிதி எஸ். சிறி சற்குணராஜா, வேல்நம்பி ஆகியோர் இன்று 

தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருக்கின்றனர் எனத் தெரியவருகிறது.மேலும், இவர்களைவிட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து 

வைத்திய கலாநிதி எஸ். ரவிராஜ், பேராசிரியர்கள் பி.ரவிராஜன், கே.மிகுந்தன் ஆகியோர் தமது விண்ணப்பங்களை விரைவில் சமர்ப்பிக்கவிருப்பதாக விடயமறிந்த 

வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது. இதேவேளை, கடந்த 23 நாட்களாக நாடுமுழுவதும் பல்கலைக்கழகங்களின் போதனை சாரா ஊழியர்களின் 

பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்று வருவதனால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்ப முடிவுத்திகதி நீடிக்கப்படுமா 

என்பது குறித்த சர்ச்சை ஒன்று நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு