SuperTopAds

இம்மாத நடுப்பகுதியில் பலாலி விமான நிலையத்திலிருந்து சேவைகள் ஆரம்பமாகும்..!

ஆசிரியர் - Editor I
இம்மாத நடுப்பகுதியில் பலாலி விமான நிலையத்திலிருந்து சேவைகள் ஆரம்பமாகும்..!

பலாலி விமான நிலையத்திலிருந்து 70 முதல் 80 ஆசனங்களை கொண்ட விமானங்கள் மூலம் இந்தியாவுக்கான விமான சேவைகள் இந்த மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளா் வே.சிவஞானசோதி கூறியுள்ளாா்.

இது தொடர்பில் அவர்மேலும் தெரிவிக்கையில்,பலாலி விமான நிலையத்தில் இரண்டு மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

விமானம் தரித்து நிற்கும் பகுதி,

விமானம் தரித்து நிற்குமிடத்திலிருந்துஓடு பாதைக்கு செல்லும் பாதை (taxi way),

விமான நிலையக் கட்டடம்,

கட்டுப்பாட்டுக் கோபுரம் (Airport traffic control tower)

தீயணைப்பு பாதுகாப்புபோன்ற வேலைகள் 

மேற்கொள்ளப்படும் நிலையில் இம்மாத நடுப்பகுதியில் முடிவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதையடுத்து முதல் கட்டமாக டேபேர் புரெப் என்னும் 70 முதல் 80 ஆசனங்களை கொண்ட ஏ.ரி.ஆர்.72 ரக சிறிய விமானங்கள் 

இந்தியாவின் பிராந்திய விமான நிலையங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடவுள்ளன.ரத்மலானை, மட்டக்களப்பு, இந்தியாவின் முக்கிய புதுடெல்லி, மும்பை, கொச்சின், ஐதராபாத் நான்கு நகரங்களுக்கிடையில் விமான சேவை 

மேற்கொள்ளப்படவுள்ளது. இதையடுத்து விமான நிலையத்தின் இரண்டாம் கட்டமான பிராந்திய விமான நிலையமாக்கும் அபிவிருத்திப் பணிகள் 20 பில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ளன.

பணிமுடிவடைந்ததும் டோபோ ஜெட் எனினும் 150 முதல் 250 ஆசனங்களைக் கொண்ட ஏ - 320 மற்றும் ஏ - 321 ரக விமானங்கள் சேவையில் ஈடுபடவுள்ளன. இந்த விமானங்களுக்கான ஓடுபாதை 3200 மீற்றருக்கு குறையாது இருக்க வேண்டும். 

இந்தப் பிராந்திய விமான நிலையத்திலிருந்து மாலைதீவு , இந்தோனேசியா மற்றும் இந்தியா பிராந்தியங்களுக்கு விமான சேவை மேற்கொள்ளப்படவுள்ளது.இந்த இரண்டாம் கட்ட விமான நிலைய அபிவிருத்திப் பணி எதிர்வரும் நவம்பர் - டிசம்பர் பகுதியில் 

ஆரம்பமாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான அபிவிருத்தி பணிக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கவுள்ளது.இரண்டாம் கட்டப் பணி முடிவடைந்த பின்னரே சர்வதேச விமான நிலையமாக்கும் மூன்றாம் கட்டப்பணி முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.