மயிட்டி துறைமுகத்தின் 2ம் கட்ட அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்..!

ஆசிரியர் - Editor I
மயிட்டி துறைமுகத்தின் 2ம் கட்ட அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்..!

மயிலிட்டி துறைமுகத்தின் 2ம் கட்ட பணிகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. 1ம் கட்டப் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்த நிலையிலேயே 2ம் கட்ட பணிகள் ஆரம்பமாக விருக்கின்றது. 

கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசன, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் மீன்பிடி துறைமுகங்கள், நங்கூரமிடும் தளங்கள் மற்றும் இறங்குதுறைகள் 

ஆகியவற்றின் அபிவிருத்தி மற்றும் மீள்நிர்மாண செயற்றிட்டத்தின் கீழ் 194 மில்லியன் ரூபா செலவில் இரண்டாம் கட்ட வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.இத்துறைமுகம் இரண்டாம் கட்டத்தில் 

கடற்கரையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துமுகமாக ஏல விற்பனை மண்டபம், கரைக்காவல் அலுவலகம் மற்றும் தங்குமிடங்கள், படகு இயந்திரங்களுக்கான களஞ்சிய அறைகள், கடை மற்றும் பாதுகாப்பு அலுவலகம் 

உட்பட்ட நிர்வாக கட்டடம் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான விடுதி என்பனவும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு