பொய் சாட்சி வழங்குமாறு மிரட்டியவருக்கு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் கடும் எச்சாிக்கை..!

ஆசிரியர் - Editor I
பொய் சாட்சி வழங்குமாறு மிரட்டியவருக்கு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் கடும் எச்சாிக்கை..!

காசோலை மோசடி வழக்கில் எதிராளியை பொய் சாட்சி வழங்குமாறு வற்புறுத்தி அச்சுறுத்திய முறைப்பாட்டாளரை யாழ்.நீதிவான் கடுமையாக எச்சாித்துள்ளாா். 

யாழ்.நீதவான் நீதிமன்றில் காசோலை மோசடி வழக்கொன்று நடைபெற்று வருகின்றது. குறித்த வழக்கின் கடந்த தவணை விசாரணைகள் முடிவடைந்து வழக்குடன் 

தொடர்புடையவர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே வந்த போது , வழக்கின் முறைப்பாட்டாளர் மூன்றாம் எதிரியிடம் தனிப்பட்ட ரீதியில் அனுகி தமக்கு சாதகமாக 

பொய் சாட்சியம் அளிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு எதிராளி மறுப்பு தெரிவித்து சென்றிருந்தார்.

பின்னர் , அன்றைய தினம் மாலை கொக்குவில் பகுதியில் குறித்த மூன்றாம் எதிராளி தனது முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளை முறைப்பாட்டாளரின் சகாக்கள் 

மோட்டார் சைக்கிளில் வந்து அவரை வழிமறித்து மிரட்டி முறைப்பாட்டாளருக்கு சாதகமாக பொய் சாட்சியம் அளிக்குமாறு மிரட்டி சென்றனர்.

குறித்த மிரட்டல் சம்பவம் தொடர்பில் மூன்றாம் எதிராளி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 

இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , எதிராளியின் சட்டத்தரணி , 

தமது கட்சிகாரர் மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

அதனை அடுத்து நீதவான் முறைப்பாட்டாளரிடம் இவ்வாறான செயற்பாடுகளில் இனி ஈடுபட கூடாது என கடுமையாக எச்சரித்ததுடன் , 

இனி அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டால் வழக்கு நிறைவடையும் வரை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்படுவீர் என கடுமையாக எச்சரித்தார். 

அதனை தொடர்ந்து வழக்கை திகதியிட்டு ஒத்திவைத்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு