பொதுமகன் மீது தாக்குதல் நடாத்திய புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினா்..! மக்களிடம் மன்னிப்பு கோாிய உறுப்பினா்கள்..

ஆசிரியர் - Editor I
பொதுமகன் மீது தாக்குதல் நடாத்திய புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினா்..! மக்களிடம் மன்னிப்பு கோாிய உறுப்பினா்கள்..

பொதுமகன் ஒருவன் மீது புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளா் தாக்குதல் நடாத்தியமை தவ றானது என பிரதேசசபை உறுப்பினா்கள் தாக்குதலுக்கு இலக்கான குடும்பத்தாாிடம் மன்னிப்பு கோாியிருக்கின்றனா். 

குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் தவிசாளரினால் தாக்கப்பட்ட நபரையும் சந்தித்து விடயங்களை கேட்டறிந்தனர். 

இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் பலரும் தம்மை கேள்வி எழுப்பியதாகவும் இவ்விடயம் தொடர்பில் வருத்தம் தெரிவிப்பதாகவும் உறுப்பினர்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.கடந்த வெள்ளிக்கிழமை குறித்த பகுதியில் 

பொதுமகன் ஒருவரை தாக்கியமை தொடர்பான காட்சிகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியதுடன், பல்வேறு விமர்சனங்களும் தவிசாளர் பிறேமகாந் மீது முன்வைக்கப்பட்டது. 

குறித்த சம்பவம் தொடர்பில் இன்று முற்பகல் குறித்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் நேரில் சந்தித்து விடயங்களை கேட்டறிந்ததுடன், அப்பகுதியில் உள்ள பொது அமைப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.

தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த உறுப்பினர்கள் குறித்த சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் 10ம் திகதி இடம்பெறவுள்ள சபை அமர்வின்புாது பேசப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

குறித்த குடும்பம் ஏற்கனவே யுத்தம் மற்றும் ஏனைய செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பிரதேச சபை தவிசாளர் இவ்வாறு நடந்து கொண்டமை கவலை அளிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 

பிரதேச சபைகளிற்கென வழங்கப்பட்ட கொஞ்ச அதிகாரங்களைக்கொண்டு இவ்வாறு மக்களை பாதிப்படைய செய்யும் வகையில் நடந்து கொள்வது பொருத்தமற்றது எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

குறித்த காணி பிரதேச சபைக்கு பிரதேச செயலகத்தினாலோ வேறு தரப்பினராலோ வழங்கப்படாத நிலையில், தவிசாளர் குறித்த காணியில் நிர்வாக ரீதியில் செயற்படாது, நேரடியாக இவ்வாறு நடந்துகொண்டமை தொடர்பில் 

சபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு