இலங்கை தம்பதியை விடுதலை செய்யுங்கள்..! அவுஸ்ரேலிய அரசிடம் ஐ.நா சபை உருக்கமான வேண்டுகோள்..
அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழ் குடும்பத்தை விடுதலை செய்யுங்கள் என ஐக்கிய நாடுகள் சபை அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு வேண்டுகோ ள் விடுத்திருக்கின்றது.
அடுத்த முப்பது நாட்களிற்குள் இலங்கை தம்பதியினரையும் அவர்களது குடும்பத்தையும் சமூக சூழ்நிலைக்குள் விடுதலை செய்யவேண்டும் அல்லது கிறிஸ்மஸ் தீவிலிருந்து அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.
என ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த தகவலை நடேஸ்பிரியா தம்பதியினரின் சட்டத்தரணி கரினா போர்ட் உறுதி செய்துள்ளார். ஐநாவின் வேண்டுகோளை அவுஸ்திரேலிய அரசாங்கம் கட்டாயமாக கடைப்பிடிக்கவேண்டியதில்லை
என்றாலும் குறிப்பிட்டுள்ள அவர் எனினும் தமிழ் குடும்பத்தை விடுதலை செய்வதற்கு அரசாங்கத்தை தூண்டும் விதத்தில் இந்த நடவடிக்கை அமைந்திருக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நடேஸ் பிரியா தம்பதியினரும் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சரும் சமர்ப்பித்த ஆவணங்களை ஆராய்ந்த பின்னர் இந்த முடிவிற்கு வந்துள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
அவர்களிற்கான மாற்றுவழிகளை கோரிவருகின்றோம் என தெரிவித்துள்ள அவர் நடேஸ்பிரியா குடும்பத்தினரை கமராவை அணிந்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள்தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர் எனவும் போர்ட் தெரிவித்துள்ளார்.
இது அவர்களின் அந்தரங்களை மீறும் விடயம்,அவர்களால் எங்கும் தப்பிக்க முடியாது என்பதால் இது தேவையற்ற நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.