3 நீதிபதிகளின் முன் கோட்டாவின் எதிா்காலம்..! ஜனாதிபதி ஆவாரா? மேன்முறையீட்டு நீதிமன்றில் பரபரப்பு..

ஆசிரியர் - Editor I
3 நீதிபதிகளின் முன் கோட்டாவின் எதிா்காலம்..! ஜனாதிபதி ஆவாரா? மேன்முறையீட்டு நீதிமன்றில் பரபரப்பு..

ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாய ராஜபக்சவின் இரட்டை குடியுாிமை தொடா்பாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்கு விசாரணையால் மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகம் பரபரப்பாக மாறியிருக்கின்றது. 

மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மூன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைகள் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பில் 

இன்று மாலை தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கோத்தபாயவுக்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.

இந்நிலையில் இன்றைய தீர்ப்பு ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

கொழும்பில் மேல் நீதிமன்றத்திற்கு செல்லும் வீதிகளின் இரு முனைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வீதியின் இரு புறமும் தடுப்புக் கட்டைகள் போடப்பட்டு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு