ரவுடிகளின் வாள்வெட்டுக்கு இலக்கான குடும்பஸ்த்தா் 3 வாரங்களின் பின் உயிாிழப்பு..! மண்டையை சொறிந்து கொண்டிருக்கும் பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
ரவுடிகளின் வாள்வெட்டுக்கு இலக்கான குடும்பஸ்த்தா் 3 வாரங்களின் பின் உயிாிழப்பு..! மண்டையை சொறிந்து கொண்டிருக்கும் பொலிஸாா்..

யாழ்.கோண்டாவில்- உப்புமடம் சந்தியில் ரவுடிகளின் வாள்வெட்டுக்கு இலக்கான இருப்பக உாி மையாளா் 3 வாரங்கள் வைத்தியசாலையில் சிகிக்சை பெற்றுவந்த நிலையில் நேற்றய தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளாா். 

வாள்வெட்டுக்கு இலக்காகி 3 வாரங்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தபோதும் சம் பவம் தொடா்பாக கோப்பாய் பொலிஸாா் எந்தவொரு நடவடிக்கையினையும் இதுவரை எடுக்க வில்லை. என உறவினா்கள் கண்ணீா்மல்க கூறியுள்ளனா். 

கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது -47) என்பவரே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் செம்ரெம்பர் 6ஆம் திகதி மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

அன்று மாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று இரும்பகத்துக்குள் புகுந்து அதன் உரிமையாளரை கண்மூடித்தனமாகத் தாக்கியதுடன், இரும்பகத்துக்குள் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்தது.

இரும்பகத்தில் இருந்த கட்டை ஒன்றை எடுத்து உரிமையாளரின் தலையில் கும்பல் தாக்கியிருந்தது. அதனால் தலையில் படுகாயமடைந்த அவர், நேற்று வரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் 24 நாட்களின் பின்னர் இன்று இரவு 9.30 மணியளவில் அவர் உயிரிழந்தார் என்று உறவினர்கள் தெரிவித்தனர். சம்பவ தினத்தன்று கோப்பாய் பொலிஸார் இரும்பகத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். 

னினும் உரிமையாளரைத் தாக்கல் கும்பல் பயன்படுத்திய மரக்கட்டையை சான்றுப்பொருளாக எடுத்துச் செல்ல பொலிஸார் மறுப்புத் தெரிவித்திருந்தனர். எனினும் உரிமையாளர் உயிரிழந்தவுடன் தற்போது உறவினர்களிடம் வாக்குமூலம் 

பெற்றுக்கொள்வதற்கு கோப்பாய் பொலிஸார் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர் என்று உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு