வீட்டுக்குள் புகுந்து வயோதிபா்கள் மீது தாக்குதல்..! காவாலிக்கு பயந்து நடவடிக்கை எடுக்க மறுக்கும் கோப்பாய் பொலிஸாா்.. (வீடியோ இணைப்பு)
யாழ்.கொக்குவில் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து வயோதிபா்கள் மீது மூா்க்கத்தனமாக தாக்குதல் நடாத்திய காவலி மீது நடவடிக்கை எடுக்க கோப்பாய் பொலிஸாா் தயங்குவதாக பாதிக்கப்பட்டவா்கள் கூறுகின்றனா்.
இந்நிலையில் காவாலி மீது நடவடிக்கை எடுக்ககோாியும் தமக்கு நீதியினை பெற்றுக் கொடுக்க கோாியும் பாதிக்கப்பட்டவா்கள் இன்று மதியம் யாழ்.மனித உாிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனா்.
கடந்த சில நாட்களுக்கு முன்னா் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் பட்டப்பகல் வேளையில் புகுந்த காவாலி வயோதிப தாய் மற்றும் தந்தை ஆகியோரைத் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாட்டை பதிவு செய்தனர்.
அந்த வீட்டின் மகன் மற்றும் மகள் வேலைக்குச் சென்றதால் சம்பவம் நடைபெறுகின்றபோது அவர்கள் அங்கு இருக்கவில்லை. ஆனாலும் அவர்கள் மாலையில் வந்திருந்தபோது வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிளையும் தீ வைத்து எரித்துள்ளனர்.
இந் நிலையலில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் உரி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் அந்த வீட்டிற் வசிப்பதற்கு அச்சம் காரணமாக அந்த வீட்டுக்காரர்கள் வேறு இடத்திற்குச் சென்று தங்கியுள்ளனர்.
இந்தச் சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுத்து தமக்கான நீதியை பெற்றுத் தருவதுடன் தாம் மீண்டும் தமது சொந்த வீட்டிற்கு வருவதற்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கமையவே யாழிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று முறைப்பாட்டை பதிவு செய்தள்ளனர். அத்தோடு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிலும் கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.
இதே வேளை வீட்டில் இடம்பெற்ற சம்வம் தொடர்பான சீசீரீவி கமரா காணொலியையும் அவர்கள் வெளியிட்டுள்ளமை குறிப்படத்தக்கது.