SuperTopAds

அவசர படாதீா்கள்..! ஜனாதிபதி தோ்தல் தொடா்பாக தீா்மானம் எதனையும் நாங்கள் எடுக்கவில்லை..

ஆசிரியர் - Editor I
அவசர படாதீா்கள்..! ஜனாதிபதி தோ்தல் தொடா்பாக தீா்மானம் எதனையும் நாங்கள் எடுக்கவில்லை..

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், தமிழ்தேசியக்கூட்டமைப்பு எவ்வித தீர்மானங்களையும் இதுவரை எடுக்கவில்லை என யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அனைத்து வேட்பாளர்களுடனும் பேசிய பிற்பாடே அதுதொடர்பில் ஒரு தீர்மானத்தை எடுக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - குமுழமுனைப் பகுதியில், 29.09.2019 இன்று,

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்தாய்வுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சுமந்திரனிடம், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்ளவிக்கே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாம் பங்கொடுக்கின்ற நிழ்வுகளில், அமைச்சர்கள் வருகின்றபோது அவர்களுக்கு நன்றி செலுத்தி பேசுவது வழக்கம்.

வேறொரு நிவாரணத்திற்கு ஒரு அமைச்சர் வந்தால், அவர்களையும் நன்றி செலுத்தி பேசுவது வழக்கம். அந்த விதத்தில், சில பொதுவான நல்லகருத்துக்கள் சில வேளைகளில் சொல்லப்பட்டிருக்கலாம்.

ஆனால் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக கட்சி எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. யாரை ஆதரிப்பதென்றோ, எவரயாவது ஆதரிக்கவேண்டும் என்றுகூட, நாங்கள் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை.

நாங்கள் எல்லா வேட்பாளர்களுடனும், அவர்கள் விரும்பினால், பேச்சுவார்த்தை நடாத்துவதென தீர்மானித்திருக்கின்றோம்.

அப்படி சிலசில பேச்சுவாரத்தைகள் நடைபெறுகின்றன. ஆகையினாலே அவ்வாறான பேச்சுக்கள முடிவடைந்த பின்பு, அவர்களும் பகிரங்கமான நிலைப்பாடுகளை அவதானித்து ஒரு தீர்மானத்தை எடுப்போம்.

இதுவரையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எந்த தீர்மானங்களும் எட்டப்படவில்லை. என்றார்.