எழுத்துமூல உத்தரவாதம் கொடுத்தால் ஆதாியுங்கள்..! சீ.வி.கே விடாப்பிடி..

ஆசிரியர் - Editor I
எழுத்துமூல உத்தரவாதம் கொடுத்தால் ஆதாியுங்கள்..! சீ.வி.கே விடாப்பிடி..

நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் திருப்திகரமான நிலைக்கு எந்தவொரு தென்னிலங்கைக் கட்சியும் எழுத்துமூலமான வாக்குறுதி தராது விட்டால் தேர்தலில் வாக்களிக்காமல் பகிஸ்கரிக்கவேண்டிய நிலைமை வரலாம் 

என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று  நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் தத்தமது ஜனாதி வேட்பாளர்களை அறிமுகம் செய்திருந்தனர் ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்ட இழுபறிகளின் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் யார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய சூழ்நிலையில் தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பாலான கட்சிகள் தங்களின் ஜனாதிபதி வேட்பாளர்கள் யார் என பகிரங்கப்படுத்தியுள்ளன. இந்நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியைத்தான் ஆதரிக்கும் என சிலர் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 

அனைத்துத் தரப்புக்களுடனும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அதன் பின்னர் கட்சி ஒன்றுகூடி தீர்மானம் எடுக்கும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியால் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சஜித் பிரேம தாசவில் கூட பல குறைபாடுகள் உள்ளன. வடக்கு கிழக்கின் தமிழர்களின் நிலங்கள் அடாத்தாக 

அபகரிக்கப்படும் தொல்பொருள் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சு அவரிடமே உள்ளது.தொல்பொருள் திணைக்களத்தை தனக்குக் கீழ்வைத்திருக்கும் சஜித் பிரேமதாச தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் அடாத்தாக அபகரிக்கப்படும் போது எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

கடந்த காலத்திலும் சரி தற்போதைய அரசியலிலும் சரி சஜித்பிரேமதாச பெளத்த மேலாதிக்க வாதத்தை முன்னொடுத்து வருபவர். நாட்டில் இன்னும் ஆயிரம் விகாரைகளை கட்டவேண்டும் என கொள்கையுடையவர். இவ்வாறு உள்ளவரின் கொள்கையில் வடக்கு கிழக்கில் எந்தவொரு விகாரையும் புதிதாக கட்டப்படமாட்டாது. என உறுதிமொழி தரவேண்டும். 

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக எழுத்துமூலம் உத்தரவாதம் தரவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. அவ்வாறு தமிழ்த் தரப்புக்கு எழுத்து மூலம் தரும்உத்தரவாதத்தை தென்னிலங்கையில் உள்ள மக்கள்மத்தியில் பகிரங்கமாக எடுத்துக்கூறவேண்டும். 

இந்த விடையத்தில் தென்னிலங்கைக் கட்சிகளின் ஒருவரோனும் திருப்தியான நிலைக்கு வராவிட்டால் நாம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வடகிழக்கு தமிழர்கள் தேர்தலில் வாக்களிக்காமல் பகிஷ்கரிக்கவேண்டிய நிலை ஏற்படலாம். தேர்தலில் வாக்களிப்பது என்பது ஜனநாயகம். எனினும் தென்னிலங்கையிலுள்ள எந்தத் தரப்பும் 

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக எழுத்துமூலமான வாக்குறுதியைத் தராது விட்டால் நாம் தேர்தலில் இருந்து ஒதுங்கவேண்டி வரும். அவ்வாறு நாம் தேர்தல்களில் ஒதுங்கியிருந்த வரலாறுகளும் உள்ளன. நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தரப்பாகிய நாம் ஒதுங்கியிருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் தேர்தலை பகிஷ்கரித்து யார் 

ஆட்சிக்கு வருகின்றார்களோ அவர்களுக்கு சர்வதேச நாடுகளூடாக எமது பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க அழுத்தம் கொடுப்போம்.வடக்கில் அண்மையில் இலங்கையில் பௌத்தத்திற்குத்தான் முன்னுரிமை உள்ளது என சிலர் உலகிற்கு எடுத்துக்காட்டக்கூடிய வகையில் சம்பவம்ஒன்று இடம்பெற்றுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் அடாத்தாக விகாரை அமைத்து செயற்பட்டுவந்த தேரர் அண்மையில் உயிரிழந்திருந்தார். அவரது உடலை ஆலய தீர்த்தக்கேணியில் தகனம் செய்தமையினால் பலமுரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.பொதுபலசேனாவின் தலைவர் ஞானசார தேரர் 

இலங்கையில் பௌத்தத்திற்குத்தான் முதலிடம் இது வடக்குக் கிழக்கிற்கும் பொருந்தும் என கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்தின் ஊடாக அரசிலமைப்பில் துணை தேடுகின்ற தேவை உள்ளது.குறிப்பாக 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பில் பௌத்தத்திற்கு முதன்மை என்றுள்ளது. 

இந்த அரசியல் அமைப்பு தமிழ் மக்களின் ஆதரவோடு இயற்றப்பட்டது அல்ல. தமிழர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பானது. தமிழர்களின் ஒப்புதல் இல்லாமல் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு எம்மைக் கட்டுப்படுத்தாது. இதை வைத்துக்கொண்டு எம்மீது அடாவடி காட்டுவது முறையற்ற விடையம் 

இந்த அரசியல் அமைப்பை வைத்துக்கொண்டு தென்னிலங்கையில் வேண்டுமானால் பௌத்தத்திற்கு முதல் உரிமை என்று ஞானசார தேரர் கூறலாம் இதே அரசியலமைப்பில் ஏனைய மதங்களுக்கான உரிமைகள் தொடர்பிலும் கூறப்பட்டுள்ளது.40 வருடமாக சிங்கள ஏகாதிபத்தியம் உருவாக்கிய ஏற்பாட்டிலும் சரி இப்போதைய 

புதிய அரசியல் அமைப்பிலும் சரி பௌத்தத்திற்கு முதன்மை வழங்க தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் தமிழ்த்தேசியக் சகூட்டமைப்பு பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்க ஏற்றுக்கொண்டு விட்டதாக பொய்யான பிரச்சாரங்களை செய்கின்றது. இவ்வாறான பிரச்சாரங்கள் அர்த்தமற்றதுநீராவியடி பிள்ளையார் ஆலய விடையத்தில் 

இன்னுமொரு விடையத்தையும் கூற விரும்புகின்றேன் பொலிஸார் கண்ணை மூடிக்கொண்டு நடந்தவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தது அந்தப் பாதுகாப்புத் துறை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கின்றார்கள். அவர்கள் எதையும் செய்யவில்லை என்பதை ஜனாதிபதியும் அறிவார். 

இன்று சட்டத்தரணிகள் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள் என்றால் காரணம் இல்லாமல் நீதிசார் சட்டத்தரணிகள் அவ்வாறு ஈடுபடமாட்டார்கள் என்பதை ஜனாதிபதி கருத்தில் எடுத்திருக்கவேண்டும். ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அதே நேரம் 

அவரால் விடுவிக்கப்பட்ட நியாம் இன்றி விடுவிக்கப்பட்ட ஞானசார தேரர் தன்னை ஒருவரும் ஒன்றும் செய்யமுடியாது என்று செயற்படுவதையும் ஜனாதிபதி கண்ணை மூடிக்கொண்டு பார்த்துக் கொண்டிருப்பதும் ஜனாதிபதியின் தவறான அனுகுமுறை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இன்னுமொன்றையும் பொலிஸாருக்குக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் வடக்கில் இராணுவத்தை வெளியேறவேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றோம். மக்கள்மத்தியில் பொலிஸார் மீதிருந்த நம்பிக்கை குறைவடைந்து செல்கின்றது. பொலிஸாரும் பௌத்த மேலாதிக்கத்திற்கு பக்கச்சார்பாக செயற்படுவார்களாயின் 

வடக்கில் பொலிஸாருக்கு எதிராகவும் மக்கள் குரல் கொடுக்கவேண்டி வரும் என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு