SuperTopAds

நாங்களும் சுகாதார தொண்டா்கள் என கூறிய 300 பேரை காணவில்லையாம்..! தலைவிாித்தாடும் லஞ்சம்..

ஆசிரியர் - Editor I
நாங்களும் சுகாதார தொண்டா்கள் என கூறிய 300 பேரை காணவில்லையாம்..! தலைவிாித்தாடும் லஞ்சம்..

வடமாகாண சுகாதார தொண்டா் நியமனத்தில் நடைபெற்றுள்ள மோசடிகள் அம்பலமான நிலை யில், தாங்களும் சுகாதார தொண்டா்கள் என கூறிய 300 போ் தலைமறைவாகியுள்ளதாக வடமா காண சுகாதார அமைச்சு கூறுகிறது. 

நீண்டகாலமாக சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றியவர்களிற்கு நிரந்தர நியமனம் வழங்கும் வகையில் விபரங்கள் சேகரிக்கப்பட்ட சமயம் நீண்டகாகமாக 452 பேரின் பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில். 

அதற்கான ஏற்பாடுகள் அனுமதிகள் பெறப்பட்டபோது இந்த எண்ணிக்கை 940பேர் என உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வாறு கானப்பட்ட 940 பேருக்கும் நேர்முகத் தேர்விற்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நேர்முகப் பரீட்சை இடம்பெற்றபோது 

குறித்த நேர்முகத் தேர்வுகளில் 1900ம் பேர் தோற்றியிருந்தனர். இவ்வாறு நேர்முகத் தேர்விற்கு தோற்றியவர்களில் இருந்து 452 பேர் தேர்வு செய்யப்பட்டு முதல்கட்டமாக நிரந்தர நியமனம் வழங்குவதற்கான பெயர்ப் பட்டியல் சிபார்சு செய்யப்பட்டது.

இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 452 பேரில் பல புது முகங்கள் தேர்வாகியிருந்ததோடு எந்தக் காலத்திலும் சேவை செய்யாத பலரும் உள்வாங்கப்பட்டு ஆரம்பம் முதலே பணியாற்றிய 452 பேரில் பலர் புறக்கணிக்கப்பட்டிருந்தனர். 

கிளிநொச்சி மாவட்டத்தில் 19 வயது இளைஞா் ஒருவரும் உள்வாங்கப்பட்டிருந்தமை, யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளினால் போலியாக கடிதம் வழங்கப்பட்டவர்களும் கண்டறியப்பட்டனர். 

அதனால் குறித்த தொண்டர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து மீண்டும் நேர்முகத் தேர்வு இடம்பெறும் என ஆளுநர் உத்தரவிட்டார். இதற்கமைய தற்போது மீண்டும் நேர்முகத் தேர்வுகள் நேற்று முதல் இடம்பெறுகின்றன. 

இம் முறை இடம்பெறும் நேர்முகத் தேர்வுகள் மாவட்ட ரீதியில் இடம்மெறுவதோடு சுகாதார திணைக்கள அலுவலகங்களில் இடம்பெறும் நேர்முகத் தேர்வுகளில் குறித்த மாவட்ட அதிகாரிகள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.

அதேநேரம் நேர்முகத் தேர்வுகளில் தொண்டர்களின் சார்பு பிரதி நிதிகளிற்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதோடு பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பார்வையாளர்களாகவும் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதேநேரம் கடந்த முறை இடம்பெற்ற மோசடியை தவிர்க் தொண்டர்கள் கூறிய ஆலோசணைகளும் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த முறை இடம்பெற்ற நேர்முகத் தேர்விற்கு 1900ற்கும் அதிகமானோர் கலந்துகொண்ட நிலையில் 

இம் முறை 1600 பேர் வரையிலேயே தமது பெயர்களை பதிவு செய்துள்ளதனால் 300ற்கும் மேற்பட்டோர் இடையில் காணாமல் போயுள்ளனர். இதனால் குறித்த 300 பேரும் மோசடியாக தோற்றியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

இதேநேரம் யாழ்.மாவட்டத்தில் அதிக தொண்டர்கள் கானப்படுவதனால் 7 பிரிவுகளாக நேர்முகத் தேர்வுகள் இடம்பெறுகின்றன.