சுகாதார தொண்டா் நியமனத்தில் மோசடி..! அதிா்ந்துபோன ஆளுநா். விசாரணைக்கு உத்தரவு. சிக்கபோகும் அதிகாாிகள்..

ஆசிரியர் - Editor I
சுகாதார தொண்டா் நியமனத்தில் மோசடி..! அதிா்ந்துபோன ஆளுநா். விசாரணைக்கு உத்தரவு. சிக்கபோகும் அதிகாாிகள்..

வடமாகாண சுகாதார தொண்டா்கள் நியமனத்திற்கு போலி உறுதிப்படுத்தல் கடிதங்களை வழங் கி சுகாதார தொண்டா்களாக பணியாற்றாத பலரை சுகாதார தொண்டா்களாக்க முயற்சித்த அதி காாிகள் மீது நடவடிக்கை ஆளுநா் சுரேன் ராகவன் பணித்துள்ளாா். 

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களிற்காக இடம்பெற்ற நேர்முகத் தேர்வுகளின்போது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் பல போலியானவை என முறையிடப்பட்டுள்ளது. இதில் 19 வயதுடையவரிற்கு 3 ஆண்டுகால சேவைக்காலம் , 

வெளிநாட்டில் இருந்து 6 மாதங்களிற்கு முன்பு திரும்பியவரிற்கு பல ஆண்டுகால சேவைக் காலம் அதனைவிட பிற தொழில்களில் இருந்தவர்களிற்கு என பலதரப்பட்ட மோசடியான கடிதங்கள் வழங்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

இவை தொடர்பில் தனித்தனியே ஆராய்ந்து அதற்கான ஆரம்ப விசாரணைகள் இடம்பெறும் அதன் அடிப்படையில் நடவடிக்கைகளும் இடம்பெறும் அதனைவிட கடந்த முறை இடம்பெற்ற நேர்முகத் தேர்வுகளின்போது 1900 பேர் தோற்றிய நிலையில் 

இம்முறை 1600 போ் நேர்முகத் தேர்விற்கு பதிவு செய்துள்ளனர். இதனால் 300பேர் தாமாக ஒதுங்கி சென்றுள்ளனர். எனில் அவர்களுற்கு உறுதிப்படுத்தல் கடிதங்கள் வழங்கிய அதிகாரிகள் தொடர்பில் கண்டறிய முயற்சிகள் இடம்பெறுகின்றன.

இவ்வாறு பல நடவடிக்கைகளும் நேர்மையை உறுதிப்படுத்த மேற்கொள்ளப்பட்டு உண்மையான தொண்டர்களை உள்வாங்க அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெறும் அதேநேரம் போலியாக கடிதம் வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் 

உரிய பணிகள் இடம்பெறுகின்றன. இவ்வாறு போலியான கடிதங்கள் வழங்கிய சம்பவங்கள் குறிப்பிட்ட சில பகுதிகளில் அதிகமாக இடம்பெற்றுள்ளமை தொடர்பிலும் முறையிடப்படுகின்றது. அதனால் அவை தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படும் 

என கூறப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு