நெடுங்கேணியில் யானைகள் அட்டகாசம்..! அதிகாலையில் 3 மரக்கறி கடைகளை உடைத்து நாசம் செய்தது..

ஆசிரியர் - Editor I
நெடுங்கேணியில் யானைகள் அட்டகாசம்..! அதிகாலையில் 3 மரக்கறி கடைகளை உடைத்து நாசம் செய்தது..

நெடுங்கேணி நகாில் 3 மரக்கறி கடைகளை உடைத்த யானை கூட்டம் மரக்கறிகளை வீசியும் தின்றும் பெரும் சேதத்தை உண்டாக்கியிருப்பதாக பாதிக்கப்பட்ட வா்த்தகா்கள் கவலை தொிவித்திருக்கின்றனா். 

நெடுங்கேணியின் கிராமபுறங்களில் சேதங்களை ஏற்படுத்தி வந்த யானைகள் மெல்ல நகர்ந்து நகரை நெருங்கியும் சேதம் ஏற்படுத்துகின்றன. இதனை கட்டுப்படுத்து நடவடிக்கை எடுங்கள் என பல முறை கோரியும் எந்தப் பயனும் கிட்டவில்லை. 

ஆனால் யானைகள் தொடர்ந்தும் நகர்வரை வந்து சேதம் ஏற்படுத்துகின்றன. நேற்று அதிகாலை சந்தையில் அமைந்துள்ள மூன்று மரக்கறி கடைகளை உடைத்து யானைகள் உட்புகுந்துள்ளன. இவ்வாறு புகுந்த யானைகள் விற்பனைக்காக வைத்திருந்த 

பெருமளவு மரக்கறிகள் மற்றும் தேங்காய் போன்றவற்றை தின்றுள்ளதுடன், வீசி எறிந்து நாசம் செய்துள்ளன. இதனால் வர்த்தகர்களிற்கு 3 லட்சம் ரூபா வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தாம் தற்போது செய்வதறியாது நிர்க்கதி நிலையில் உள்ளோம். 

என வர்த்தகரான இந்திரன் தெரிவித்தார். இதேநேரம் நெடுங்கேணி வைத்தியசாலை, கமநல சேவைத் திணைக்களம் , பொலிஸ் நிலையம் என அனைத்துப் பகுதிக்குள்ளும் யானைகள் புகுந்துள்ளன ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

மாறாக உயிர் இழப்புக்கள் ஏதும் ஏற்பட்டால் அதற்கான பழியினையும் இவர்களே ஏற்க வேண்டும். நாம் இதனை கூறாத திணைக்களமோ, அதிகாரிகளோ கிடையாது ஆனால் எந்தப் பயனும் இல்லை . மீள்குடியேற்றத்திற்கு பின்பு மட்டும் நெடுங்கேணியில் யானைகள்

3 ஆயிரம் தென்னைகள் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பப்பாசி 2 ஆயிரம் வரையிலான வாழை மரங்களை அழித்ததோடு 11 தடவைகள் நெற்பயிர்களையும் அழித்ததோடு இரு தடவைகள் நெற் களஞ்சியங்களிற்குள்ளும் புகுந்துள்ளன.

இவற்றினை விடவும் நெடுங்கேணி வைத்தியசாலைக்குள் யானை புகுந்த பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்காதவர்கள் இனிமேலும் எடுப்பாா்கள் என்ற நன்மையும் கிடையாது. இதனால் இப் பகுதியில் வந்து வாழ பலரும் அஞ்சுகின்றனர். 

இதன் காரணமாகவே எமது பகுதி அபிவிருத்தி கானமுடியாது தவிக்கின்றது. இதுவே ஓர் சிங்கள கிராமமாக இருந்தால் ஒரு பிரச்சணை என்றால் உடன் நிவர்த்தி செய்த பின்புதான் அடுத்த பணியை மேற்கொண்டிருப்பார்கள். 

நாம் தான் தமிழர்கள் ஆச்சே என மனம் சலித்தார் நெடுங்கேணி கமக்கார அமைப்பின் தலைவர் பூபாலசிங்கம். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு