சீனா நாட்டின் கலாச்சார நிகழ்வு கிளிநொச்சியில்..! சீனா- இலங்கை நட்புறவை வலுப்படுத்தும் நோக்கமாம்..
சீன இலங்கை நட்புறவினை மேம்படுத்தும் வகையில் HUBEI கலாச்சார சுற்றுலா வாரத்தின் நிகழ்வுகள் நேற்று கிளிநொச்சியல் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இரணைமடு சந்தியில் அமைந்துள்ள லெலும்பியச மண்டபத்தில் இடம்பெற்றது.
சீனாவின் கலை கலாச்சார விழுமியங்களை பறைசாற்றும் வகையிலும், சீன இலங்கை நட்புறவினை மேம்படுத்தும் வகையிலும் குறித்த நிகழ்வு
இலங்கையின் பல பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றது. நேற்று இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சீன கலாச்சாரத்தை எடுத்து இயம்பும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வை பார்வையிட பெருமளவான மக்களும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்
உள்ளிட்ட படை உயரதிகாரிகள், கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன்போது நினைவு சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இறுதியில் சீன, இலங்கை தேசி கீதங்கள் இசைக்கப்பட்டதை அடுத்து நிகழ்வு நிறைவடைந்தது. குறித்த நிகழ்விற்கு மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.