ஐ.நாவின் தீா்மானம் தொடா்பாக உத்தியோகபூா்வ தகவல்கள் கிடைக்கவில்லையாம்..!

ஆசிரியர் - Editor I
ஐ.நாவின் தீா்மானம் தொடா்பாக உத்தியோகபூா்வ தகவல்கள் கிடைக்கவில்லையாம்..!

ஐ.நா அமைதிப்படையிலிருந்து இலங்கை இராணுவத்தை நீக்குவது தொடா்பாக உத்தியோகபூா்வ அறிவித்தல் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை. என இராணுவ தளபதி சவேந்திர சில்வா இன்று ஊடகங்கக்கு கூறியுள்ளாா். 

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று காலை விஜயம் செய்து வழிபாடுகளில் கலந்துகொண்ட அவர் அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார். இராணுவப் படையினரை இனிமேல் ஐ.நா பாதுகாப்புப் படைக்கு 

இணைத்துக் கொள்ளப்போவதில்லை என்ற தடையுத்தரவை ஐக்கிய நாடுகள் சபை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது.போர்க் குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கும் சவேந்திர சில்வாவை சர்வதேச மற்றும் உள்நாட்டு எதிர்ப்புக்களை மீறி 

இராணுவத் தளபதியாக நியமித்த இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டினால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஐ.நாவினால் தெளிவூட்டல் வழங்கப்பட்டது.எனினும் இப்படியான எந்தவொரு உத்தியோகபூர்வ தீர்மானம் பற்றிய அறிவிப்பு ஐ.நாவிடம் இருந்து 

தங்களுக்கு கிடைக்கவில்லை என இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைத்தால்தான் பதில் தெளிவூட்டலை தங்களால் வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு