பொதுமகனை தாக்கி புதுக்குடியிருப்பு பிரதேசசபை தலைவா் அடாவடி..!
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசசபை தலைவா் பிறேமகாந்த் செல்லையா நியாயம் கேட்ட பொதுமகன் ஒருவரை தாக்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமா்சனங்களை உருவாக்கியிருக்கின்றது.
நேற்று பகல் முறிகண்டி பகுதியில் தனியார் ஒருவர் தனக்கு சொந்தமானதென தெரிவித்து குடியிருந்து வரும் காணிக்குள் சென்று அவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்க பிரதேச சபை தவிசாளர் அங்கு சென்றிருந்தார்.
இதன்போது இரு தரப்பினரிற்கும் இடையில் நீண்ட நேர வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. காணி உரிமையாளர் தனதென கூறும் காணி விடயம் தொடர்பிலேயே குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. இதன்புாது காணி உரிமையாளர் தனது கையடக்க
தொலைபேசியில் குறித்த பிரதேச சபை தவிசாளர் நடந்துகொள்ளும் விதம் தொடர்பில் ஒலிப்பதிவு செய்துகொண்டிருந்தார்.இதன்போது குறித்த பொதுமகன் மீது தாக்குதல் நடத்திய குறித்த பிரதேச சபை தவிசாளர்,
பொதுமகனின் உடமைக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான காணோளி தற்புாது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதுடன், குறித்த செயற்பாடு தொடர்பில் பிரதேச சபை தவிசாளர் மீது கடும் விமர்சனங்களும்
முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறி்த தவிசாளர் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மெற்கொள்ளாது, இவ்வாறு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலு்ம, அவர்களை தாக்குகின்ற வகையிலும் நடந்து கொள்கின்றமை கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.
இதேவேளை ஒரு சில மாதங்களிற்கு முன்னர் அதே பிரதேசத்தில் தனிநபர் ஒருவரின் பிரதான வாயிலை உடைத்து உட்சென்று அங்கிருந்த முதியவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் குறித்த பிரதேச சபை தவிசாளரிற்கு எதிராக
மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடதக்கதாகும்.