ஜனாதிபதி அதிரடி முடிவு..! பல அமைச்சா்கள் சிக்கபோகிறாா்களாம்..
ஜனாதிபதி தோ்தலுக்கு முன்பதாக முக்கிய அமைச்சா்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா தீா்மானித்துள்ளதாகவும், ஆதாரங்களை திரட்டியிருப்பதா கவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றது.
கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டுவரை இடம்பெற்ற ஊழல் மோசடிகள் பற்றி விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அதன் அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்திருக்கிறது.
குறித்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையே நேற்று மாலை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய ஊழல், மோசடிகள், வீண்விரயங்கள், நம்பிக்கை இழப்புக்கள், சொத்து துஷ்பிரயோகம், ஏமாற்றுதல்,
அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை மற்றும் அதற்கு அனுமதி கொடுத்தமை, அரச வருமானத்திற்கு பங்கம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் மீது இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணைகள் கடந்த
ஜனவரி 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதியரசரான உபாலி அபேரத்ன தலைமையில் நடத்தப்பட்ட இந்த விசாரணையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அக்கிலவிராஜ் காரியவசம்,
சஜித் பிரேமதாஸ போன்ற முக்கிய பிரமுகர்களும் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.