2023 ஆம் ஆண்டு குடிசைகள் அற்ற 1வது நகரமாக கொழும்பு மாற்றப்படும்..! அமைச்சா சம்பிக்க..

ஆசிரியர் - Editor I
2023 ஆம் ஆண்டு குடிசைகள் அற்ற 1வது நகரமாக கொழும்பு மாற்றப்படும்..! அமைச்சா சம்பிக்க..

இலங்கையில குடிசைகள் அற்ற 1வது நகரமாக 2023ம் ஆண்டில் கொழும்பை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சா் பாட்லி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளாா். 

மாத்தளையில் கொடங்காவெல பஸ் தரிப்பு நிலையத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தற்போது மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதே பிரதான பிரச்சினையாக உள்ளதாகவும்

கடந்த குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் நாட்டின் தொழிற்படையில் 52,000 பேர் நாட்டை விட்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 30 இலட்சம் பேர் தற்போது வெளிநாடுகளில் வாழ்வதாக தெரிவித்த அவர், அதற்கமைவாக தனது அமைச்சின் மூலம் ´தங்கியிருப்பதற்கு உகந்த நாடு´ 

என்ற தொனிப்பொருளில் வேலைத் திட்டங்கள் இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார். நாட்டில் நகரங்களை உருவாக்கும் போது நகரங்களுக்குள் உள்ளே அபிவிருத்திகள் இடம்பெற வேண்டும் எனவும், 

வெள்ளக் கட்டுப்பாடு, கழிப்பறைகள், கழிவுநீர் கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து முறை ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் பின்னர் கொழும்பு நகரை படிப்படியாக கட்டியெழுப்பும் திட்டத்தை தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் கொழும்பை குடிசைகள் அற்ற நகராக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு