அரச ஊழியா்களின் சம்பளம் அதிகாிக்கப்பட்டது..!
இலங்கையில் உள்ள சகல அரச ஊழியா்களுக்குமான சம்பளம் ஜனாதிபதியினால் நியமிக்கப்ப ட்டுள்ள ஆணைக்குழு பாிந்துரையின் கீழ் 2020ம் ஆண்டு ஜனவாி மாதம் தொடக்கம் 3 ஆயிரம் முதல் 24 ஆயிரம் வரை அதிகாிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தகவல்கள் கூறுகின்றன.
சம்பள அதிகரிப்பையடுத்து அரச சேவையின் பல்வேறு துறைகளில் காணப்பட்ட சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கக்கூடும் என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச துறையில் அனைத்து ஊழியர்களினதும்
சம்பளம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மேலும் அதிகரிக்கும் நிலையில், விசேடமாக ரயில் மற்றும் தபால் சேவைகளில் உள்ள சம்பள முரண்பாடுகள் இதனூடாக தீர்க்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அரச ஊழியர் ஒருவரின் அடிப்படை சம்பளமானது, 2015 ஆம் ஆண்டில் அவரது அடிப்படை சம்பளத்தில் 107 சதவீத சம்பள அதிகரிப்பாகும்.சம்பள முரண்பாட்டை தீர்த்துக் கொள்வதற்கு தேவையான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு
11 பேர் அடங்கிய சம்பள மறுஆய்வு ஆணைக்குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.