தன்னை தன் இனத்திற்காய் தந்தவாின் 32ம் ஆண்டு நினைவேந்தல்..! உணா்வெழுச்சி கொண்டது நல்லுாா்..
தியாகி திலீபனின் 32ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லுாா் ஆலய சுற்றாடலில் உள்ள திலீபனின் நினைவு துாபியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
1987ம் ஆண்டு 5 அம்ச கோாிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் சாகும் வரையான உண்ணா நோன்பிருந்து தன்னை தன் இனத்திற்காய் ஆகுதியாக்கிய
மாவீரன் திலீபனின் 32ம் ஆண்டு நினைவேந்தல் அவா் உண்ணா நோன்பிருந்த நல்லுாா் வீதியில் இடம்பெற்று தொடா்ந்து நல்லுாா் ஆலய பின் வீதியில் உள்ள
நினைவுதுாபியில் இடம்பெற்றது. இதனோடு வவுனியா பொங்குதமிழ் நினைவிடத்திலிருந்து கால்நடையாக (திலீபனின் வழியில் நாங்கள் வருகிறோம்) என்ற தொனிப்பொருளில்
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் இளைஞா் அணியினாின் நடைபவனியும் இணைந்து கொண்ட நிலையில் மிக உணா்வு பூா்வமாக நினைவேந்தல் இடம்பெற்றது.