நிபந்தனைகளுடன் குதிரைப் பேரம் நிறைவுக்கு வந்தது..!

ஆசிரியர் - Editor I
நிபந்தனைகளுடன் குதிரைப் பேரம் நிறைவுக்கு வந்தது..!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிறேமதாஸவை நியமிப்பதற்கு தீா்மா னம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் நிபந்தனைகளுடன் ஐ.தே.கட்சி தலைவா் ரணில் விக்கிரமசிங் க இணக்கம் தொிவித்திருக்கின்றாா். 

அலரி மாளி­கையில் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­க­ளுடன் நேற்­று­ மாலை நடை­பெற்ற சந்­திப்­ பின்­போதே நிபந்­த­னை­க­ளுடன் சஜித் பிரே­ம­தா­சவை கள­மி­றக்­கு­வ­தற்கு பிர­தமர் ரணில் விக்­ர­ம­ சிங்க இணக்கம் தெரி­வித்­துள்­ள­தாக ஐ.தே.க. வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.

அதா­வது பிர­த­ம­ரா­கவும் கட்­சியின் தலை­வ­ரா­கவும் தொடர்ந்தும் ரணில் விக்­ர­ம­சிங்க நீடிக்­க­ வேண்டும் , ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெற்­றதும் ஆறு மாதங்கள் தொடக்கம் ஒரு­வ­ருட காலப்­ப­கு­திக்குள் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை முற்­றாக ஒழிக்­க­வேண்டும் , 

ஜனா­தி­பதி தேர்தல் பிர­சாரம் ஒன்­றி­ணைந்து மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் ஆகிய நிபந்­த­னை­க­ ளுக்கு சஜித் பிரே­ம­தாச இணக்கம் தெரிவித்தால் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அவரை கள­மி­றக்­ கலாம் என்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­துள்­ள­தாக 

கட்சித் தகவல்கள் தெரி­வித்­தன. நேற்று மாலை ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் ரணில் விக்­ர­ ம­சிங்க சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய மற்றும் அமைச்சர் சஜித் பிரே­ம­தாச தவி­சாளர் கபிர் ஹஷிம் செய­லாளர் அகில விராஜ் காரி­ய­வசம் அமைச்­சர்­க­ளான லக்ஷ்மன் கிரி­யெல்ல 

ரவி கரு­ணா­நா­யக்க மலிக் சம­ர­விக்­ரம உட்­பட கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் பங்­கேற்ற சந்­ திப்­பி­லேயே இந்த இணக்­கப்­பாட்­டினை பிர­தமர் தெரி­வித்­துள்ளார். ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு இந்த நிபந்­த­னை­களை சஜித் பிரே­ம­தாச ஏற்­றுக்­கொண்டால் 

அதற்­கான நட­வ­டிக்கை எடுப்­பது என்றும் இவற்றை ஏற்­றுக்­கொள்­ளா­விட்டால் கட்­சியின் செயற்­ கு­ழுவில் வாக்­கெ­டுப்­பினை நடத்தி வேட்­பாளர் தெரிவு தொடர்பில் தீர்­மானம் எடுப்­பது என்றும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க நிபந்­த­னை­யுடன் வேட்­பாளர் நிய­ம­னத்­துக்கு இணக்கம் தெரி­வித்­ துள்ள போதிலும் நிபந்­த­னை­களை ஏற்­றுக்­கொள்­வது தொடர்பில் அமைச்சர் சஜித் பிரே­ம­தாச அணி­யினர் நேற்று முடிவு எத­னையும் தெரி­விக்­க­வில்லை. 

தமது ஆத­ர­வா­ளர்­க­ளு­டனும் பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டிய பின்­ னரே தமது முடி­வினை அறி­விப்­ப­தாக சஜித் அணி­யினர் தெரி­வித்­துள்­ளனர். இன்­றைய தினம் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்ட பின்னர் இவ்­வி­டயம் தொடர்பில் 

தமது முடி­வினை சஜித் அணி­யினர் அறி­விப்­பார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.இந்த விட­ய­ ததில் இணக்­கப்­பாடு காணப்­பட்டால் நாளைய தினம் செயற்­கு­ழுவை கூட்டி அதன் அங்­கீ­கா­ ரத்தை பெற்­றுக்­கொள்­வ­தற்கும் ஆலோ­சிக்­கப்­பட்­டுள்­ளது. 

இல்­லையேல் செயற்­கு­ழுவில் வாக்­கெ­டுப்பை நடத்தி வேட்­பா­ளரை தெரிவு செ்யவேண்­டிய நிலை ஏற்­படும் என்று கட்சி வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன.இதே­வேளை ஐக்­கிய தேசிய கட்­சியின் முக்­கி­ யஸ்­தர்­க­ளான கபிர் ஹஷீம் அகில விராஜ் காரிய வசம் 

நவீன் திசாநாயக்க ரவி கருணாநாயக்க ஆகியோர் நேற்று இரவு சந்தித்து இது தொடர்பில் மேலதிக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு ஏற்பாடாகியிருந்தது.எட்டாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் 

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்கள் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு