சட்டமா அதிபா் ஞானசார தேரா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவேண்டும்..! முல்லைத்தீவு போராட்டத்தில் தீா்மானம்..
நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக சட்டமா அதிபா் ஞானசார தேரா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவேண்டும். என்பது உள்ளிட்ட 3 முக்கிய தீா்மானங்களை வடமாகாண சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள், பொது அமைப்புக்கள் இணைந்து எடுத்துள்ளனா்.
முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் சடலத்தை நீராவியடி பிள்ளையாா் ஆலய தீா்த்தகேணிக்கு அருகில் தகனம் செய்தமை மற்றும் சட்டத்தரணி, பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்தியமை ஆகியவற்றை கண்டித்து இன்று காலை முல்லைத்தீவில் வரலாறு காணாத பாாிய மக்கள் எழுச்சி போராட்டம் ஒன்றை சட்டத்தரணிகள், பொதுமக்கள், மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து நடாத்தியிருந்தனா். இதன்போதே மேற்படி தீா்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது எடுக்கப்பட்ட தீா்மானங்களாவன, நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக சட்டமா அதிபா் ஞானசார தேரா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யவேண்டும். எதிா்வரும் வெள்ளிக்கிழமை வரையில் வடமாகாண சட்டத்தரணிகள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடா்ந்தும் நடாத்துவது, சட்டமா அதிபா் எழுத்துமூல உத்தரவாதத்தை வழங்கவேண்டும்.
இவை நடைபெறாவிட்டால் பணி புறக் கணிப்பை தொடா்வதா? இல்லையா? என தீா்மானிப்பது என 3 தீா்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.