பிக்குவின் உடலை ஆலய வளாகத்தில் அடக்கம் செய்ய முடியாது..! முல்லைத்தீவு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

ஆசிரியர் - Editor I
பிக்குவின் உடலை ஆலய வளாகத்தில் அடக்கம் செய்ய முடியாது..! முல்லைத்தீவு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலய வளாகத்தில் பிக்குவின் உடலை தகனம் செய்ய முடியாது. ஆலய வளாகத்திற்கு வெளியே கடற்படை முகாம் வளாகத்திற்குள் தகனம் செ ய்யுமாறு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக உயிரிழந்திருந்தார். உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலை 

நீராவியடி பிள்ளையார் ஆலய சூழலில் தகனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி பிள்ளையார் ஆலயத்தரப்பினர் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்pல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

குறித்த வழக்கு மீதான விசாரணை இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது. வழக்கு விசாரணைகாக சிங்கள சட்டதரணிகள் பெருமளவானோர் நீதிமன்றில் முன்னிலை யாகியுள்ளனர். ஆலய நிர்வாகம் சார்ப்பில் சிரேஸ்ட சட்டத்தரணி 

அன்ரன் புனிதநாயகம் ,விஸ்வலிங்கம் மணிவண்ணன் ,கே.சுகாஸ் உள்ளிட்டவர்கள் முன்னிலையாகியுள்ளனர். வழக்கினை விசாணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் இரு தரப்பு சட்டத்தரணிகளின் சமர்ப்பணத்தை அடுத்து, 

நீராவியடி பிள்ளையார் ஆலய சூழலில் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்ய வேண்டாம் என்றும், அவரின் உடலை நாயாற்று கடற்படை முகாமிற்குள் தகனம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு