முல்லைத்தீவில் மத மோதலை உருவாக்கி ஜனாதிபதி தோ்தலை குழப்ப சதி..! தோ்தல் ஆணைக்குழுவுக்கு தமிழ் ஊடகவியலாளா் புகாா்.
ஜனாதிபதி தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலய சூழலில் இரு மதங்களுக்கிடையில் உண்டாகியிருக்கும் முறுகல் நிலை தோ்தலை பாதிக்கும் அபாயம் உள்ளதாக தோ்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நீராவியடி பிள்ளையாா் ஆலயத்தினை அபகாித்து பௌத்த விகாரை கட்டிய பௌத்த பிக்கு புற்றுநோயினால் இறந்த நிலையில் பிக்குவின் உடலை ஆலய வளாகத்தில் அடக்கம் செய்வதற்கு இராணுவம், கடற்படை தீவிரமாக முயற்சித்து வருகின்றது.
இந்த நிகழ்வு காரணமாக அப்பகுதியில் வாழ்கின்ற இந்து மக்களின் மனதில் பாரிய சந்தேகங்கள் ஏற்பட்டு அங்கே ஓர் போராட்டம் இடம்பெறுவதற்கான முஸ்தீபுகள் காணப்படுவதனால் உடனடியாக அப்பகுதியில் பௌத்த துறவியின்
உடலை தகனம் செய்வதனை தேர்தல்கள் ஆணைக்குழு தலையிட்டு தடுக்க வேண்டும் என ஊடகவியலாளா் ஒருவா் முறையிட்டுள்ளாா்.