கடற்றொழிலுக்கு சென்ற 3 மீனவா்களை 3 நாட்களாக காணவில்லை..! தேடி தருமாறு உறவுகள் மன்றாட்டம்.
அம்பாறை- சாய்ந்தமருது மாளிகைகாட்டுத்துறை பகுதியிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற 3 மீனவா்கள் 3 நா ட்களாக கரைக்கு திரும்பவில்லை. என அப்பகுதி மீனவா்கள் கூறியுள்ளதுடன், பொறுப்புவாய்ந்தவா்கள் தேடும் நட வடிக்கையில் இறங்கவேண்டும் எனவும் கேட்டுள்ளனா்.
சாய்ந்தமருதை சேர்ந்த சீனி முகம்மது ஜுனைதின் (வயது 36) இஸ்மா லெப்பை ஹரீஸ் (வயது 37 ) காரைதீவை சேர்ந்த சண்முகம் சிரிகிருஷ்ணன் (வயது 47) ஆகிய மீனவர்களே குறித்த படகில் பயணம் செய்துள்ளதாக தெரிவித்த குடும்பத்தினர் அவர்களின் வருகைக்காக பெரும் அவாவுடன் காத்திருக்கின்றனர்.
இவர்கள் பற்றிய தகவல்களை பொலிஸ் கடற்படை ஆகியோருக்கும் அறிவித்துள்ளதுடன் மீனவ சங்கங்களும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளது.அத்துடன் மாளிகைக்காடு கரையோர மீனவர் பாதுகாப்பு சங்கத்தினர் ஏனைய மாவட்டங்களை சேர்ந்த மீனவர் பாதுகாப்பு மையத்திற்கு
காணாமல் மீனவர்கள் தொடர்பான தகவல்கள் வழங்கி படகுகள் தேடி வருவதாக கல்முனை கரையோர மீனவர் பாதுகாப்பு சங்கத்தினர் செயலாளர் எமக்கு தெரிவித்தார். மேலும் கடந்த செப்டம்பர் 4 ம் திகதி காணாமல் போன மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையில் இலங்கையிலிருந்து
350 மைல் தொலைவில் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் இவர்கள் மீன்பிடிக்க சென்ற படகினை கரைக்கு கொண்டு வரமுடியாது என சர்வதேச கடல் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு தொலைத்தொடர்பு சாதனங்கள் இன்மையினாலே
இவ்வாறான உயிரிழப்புகளும் உடமையிழப்புகளும் நிகழ்கின்றன.உயிரை பணயம் வைத்து கடலுக்கு செல்லும் இந்த மீனவர்களின் உழைப்பை நம்பி பல குடும்பங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. மீனவர்களுக்கான அடிப்படை வசதிகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.