சா்வதேச சிறுவா் தினத்தில் முல்லைத்தீவில் பாாிய மக்கள் போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
சா்வதேச சிறுவா் தினத்தில் முல்லைத்தீவில் பாாிய மக்கள் போராட்டம்..!

2009ம் ஆண்டு போாின் இறுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெற் றோரை தொலைத்த சிறார்களின் உரிமைக்காகவும் எதிர்வரும் ஒக்ரோபர் 01ஆந் திகதி பன் னாட்டு சிறுவர் நாளில் முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்ட உறவினரின் சங்கத்தினர் கவனயீர்பில் ஈடுபடவுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன் இடம்பெறவுள்ள இந்த கவனயீர்ப்பிற்கு அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பில் 20.09.2019 இன்றையநாள், ஊடகசந்திப்பொன்றை ஏற்பாடுசெய்து அதில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 01ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினத்திலே, நாங்கள் எங்களுடைய, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவினருடைய சங்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் காலை 09மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டத்தினை நடாத்த இருக்கின்றது.

அதே வேளை அன்றைய நாள் எட்டு மாவட்டங்களிலும், அதாவது யாழில் முனீஸ்வரர் ஆலய முன்றலிலும், கிளிநொச்சியில் டிப்போ சந்தியிலுள்ள பசுமைப் பூங்கா முன்றலிலும், முல்லைத்தீவில் மாவட்ட செயலக முன்றலிலும், வவுனியாவில் பழைய பேருந்து நிலைய முன்றலிலும், மன்னாரில் மாவட்டசெயலக முன்றலிலும், 

திருகோணமலையில் பிரதேசசெயலக முன்றலிலும், மட்டக்களப்பில் காந்தி பூங்கா முன்றலிலும், அம்பாறையில் பிரதான வீதி தம்பிலுவில்.02 இலும் நடைபெறவுள்ளது.இந்த வடகிழக்கு மாகாணங்களில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட இனவழிப்பின் உச்சமாக, இறுதியுத்தத்தில் பெற்றோருடன் சரணடைந்த சிறுவர்கள் 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பெற்றோரின் பிள்ளைகள் பெற்றோருடன் வாழும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதனால் பாரிய உளத் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பெற்றோரைத் தேடும் பிள்ளைகள், பொருளாதார ரீதியான பிரச்சினைகளால் பாடசாலையிலிருந்து 

இடை விலகியும், சிறுவர் தொழிலாளிகளாகவும் உள்ளனர்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பெற்றோரைத் தேடும் பிள்ளைகளில் பலர் சிறுவயதில் திருமணம் செய்வதுடன், தாய்மையடைந்துமுள்ளனர்.ஆயிரக்கணக்கான சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிறுவர்கள் சிறுமிகள் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

இவை அனைத்திற்கும் பதில் சொல்லவேண்டிய, இலங்கை அரசும், அரச படைகளும் தமது தவறுகளை மறைத்துரைக்க முயல்கின்றனர்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களின் உரிமைக்காகவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பெற்றோரைத் தொலைத்த சிறுவர்களின் உரிமைக்காகவும் அனைவரும் ஒன்றிணைந்து, 

எங்களுடைய அன்றைய தினப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு