9 லட்சத்து 90 ஆயிரம் செலவில் புனரமைக்கப்பட்ட வீதியை காணவில்லை..! சித்தாா்த்தன் எம்.பிக்காவது தொியுமா..?

ஆசிரியர் - Editor I
9 லட்சத்து 90 ஆயிரம் செலவில் புனரமைக்கப்பட்ட வீதியை காணவில்லை..! சித்தாா்த்தன் எம்.பிக்காவது தொியுமா..?

தமிழ்தேசிய கூட்டமைப்பினால் வடக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கம்பரெலிய திட்டத்தில் பல்வேறு ஊழல்கள் இடம்பெறுவ தாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துவரும் நிலையில் யாழ்.உடுவில் பகுதியில் வீதியே போடாமல் வீதி போடப்பட்டதாக பெயா் பலகை நா ட்டப்பட்டமை தொடா்பாக மக்கள் கடும் விசனமடைந்துள்ளனா். 

குறித்த வீதி புனரமைப்பிற்கு ஒன்பது இலட்சத்து 90 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டிருப்பதாகவும் குறித்த பெயர்ப்பலகை காணப்படும் நிலையில் புனரமைக்கப்பட்ட வீதி எங்கே என மக்கள் கேள்வி எழுப்பியுள்ள மக்கள் வீதியைக் காணவில்லை என கேலியும் செய்துவருகின்றனர். கம்பரலிய வீதிகள் அமைக்கப்பட்ட பின் ஜனாதிபதி, 

பிரதமரின் படத்துடன் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினரின் படமும் பொறிக்கப்பட்டே பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டுவருகின்றன. குறித்த பிரதேசத்திற்குரிய கம்பரலிய வேலைத்திட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு