16 சாரதிகளுக்கு 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த யாழ்.நீதிவான் நீதிமன்றம்..!

ஆசிரியர் - Editor I
16 சாரதிகளுக்கு 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த யாழ்.நீதிவான் நீதிமன்றம்..!

கோப்பாய் பொலிஸ் பிாிவுக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறிய 16 சாரதிகளுக் கு 4 லட்சத்து 30 ஆயிரம் தண்டம் விதித்து யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கோப்பாய் பொலிஸ் பிரிவில் கடந்த 2 நாள்களில் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறி 16 சாரதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 

இன்று குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் மூவர் மதுபோதையில் சாரத்தியம் செய்ததுடன் ஏனையவர்கள் உரிய ஆவணங்களின்றி 

வாகனம் செலுத்திய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. வழக்குகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

16 சாரதிகளும் தம் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றில் ஏற்றுக்கொண்டனர். மதுபோதையில் சாரத்தியம் செலுத்திய மூவருக்கு தலா 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டதுடன், 

சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு மாதம் இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.உரிய ஆவணங்களின்றி சாரதித்தியம் செய்த இருவருக்கு தலா 50 ஆயிரம் ரூபா தண்டமும் 

10 சாரதிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபா தண்டமும் ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதனடிப்படையில் ஒரே நாளில் போக்குவரத்துக் குற்றங்களுக்கான 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு