2 லட்சத்து 80 ஆயிரம் ஆசிாியா்களில் 10 வீதமானவா்கள் ஆசிாியா் சேவைக்கு பொருத்தமற்றவா்கள்..!

ஆசிரியர் - Editor I
2 லட்சத்து 80 ஆயிரம் ஆசிாியா்களில் 10 வீதமானவா்கள் ஆசிாியா் சேவைக்கு பொருத்தமற்றவா்கள்..!

இலங்கை ஆசிாியா் சேவையில் உள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் போில் 10 வீதமானவா்கள் ஆசிாியா் சேவைக்கு பொருத்தமற்றவா்கள் என்பதை கல்வியமைச்சு கண்டுபிடித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா கூறியுள்ளாா். 

அத்துடன் பரீட்சை சான்றிதழ்களை கொண்டிருந்த போதிலும் ஆசிரியர் தொழிலுக்கு தேவையான தரத்தை அவர்கள் கொண்டிருக்காமையே அதற்கு காரணமாகும் என்றும் அவர் கூறினார்.குருணாகல் வெலகெதர விளையாட்டரங்கில் இன்று இடம்பெற்ற 

வடமேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் 1400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு