மதுபான விற்பனைக்கான அனுமதி பத்திரம் பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினா்கள் யாா்..? பெயா்களை வெளிப்படுத்துங்கள்..!

ஆசிரியர் - Editor I
மதுபான விற்பனைக்கான அனுமதி பத்திரம் பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினா்கள் யாா்..? பெயா்களை வெளிப்படுத்துங்கள்..!

மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதி பத்திரங்களை பெற்றிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினா்களின் பெயா் விபரங்களை பகிரங்கப்படுத்துமாறு நாடாளுமன்றில் ஆழுங்கட்சி மற் றும் எதிா்கட்சி எம்.பிக்கள் கூட்டாக கேட்டுள்ளனா். 

மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருப்பதாக செய்தித்தாள்களில் வெளிவந்திருக்கும் செய்தியினால் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவபடுத்தும் 

225 எம்.பிக்களது நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய எம்.பி,க்கள் இக்களங்கத்தை நீக்குவதற்கு இதுவரை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள அனைவரது பெயர் பட்டியலையும் ஊடகங்களிலும் சபையிலும் முன்வைக்க 

நடவடிக்கை எடுக்க வேண்டுமென சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு