SuperTopAds

போலி கடவுச்சீட்டில் ஜப்பான் செல்ல ஆசைப்பட்ட ஈரான் நாட்டவருக்கு நடந்த கதி..!

ஆசிரியர் - Editor I
போலி கடவுச்சீட்டில் ஜப்பான் செல்ல ஆசைப்பட்ட ஈரான் நாட்டவருக்கு நடந்த கதி..!

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை ஊடாக ஜப்பான் நாட்டுக்குள் நுழைய முயற்சித்த ஈரான் நாட்டை சோ்ந்த தந்தையும், மகனும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

ஈரானை சேர்ந்த 51 வயதான தந்தை ஒரு வியாபாரியாக செயற்பட்டு வருவதோடு,15 வயதான அவரின் மகன் பாடசாலையில் கல்வி கற்றுவருகிறார். குறித்த சந்தேக நபர்கள் கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் 

நேற்று இரவு 7.30 மணியளவில் ஜப்பான் செல்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் குடியகல்வு பகுதிக்கு சென்று தங்களின் சீன கடவுச் சீட்டை காண்பித்தபோது இதில் பல வித்தியாசம் இருப்பதாக தெரிவித்து உடனடியாக குடிவரவு - குடியகல்வு 

பிரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த கடவு சீட்டை இயந்திரத்தில் பரிசோதித்த பார்த்தபோது சீனா கடவுச் சீட்டில் இருக்க வேண்டிய தொழில் நுட்பங்கள் இல்லாமை தெரியவந்துள்ள நிலையில் குறித்த கடவுச் சீட்டு போலியானது என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் 

குடிவரவு- குடியகல்வு அதிகாரிகள் குறித்த சந்தேகநபர்களின் பயணப் பொதியை மேலும் பரிசோதனை செய்தபோது தெளிவில்லாத இரு விமான டிக்கெட்டுக்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் ஜப்பானிலிருந்து 

தனது நண்பர் மூலம் அவுஸ்திரேலியா செல்வதற்காக இலங்கைக்கு வந்தாகவும் குறித்த விடயத்திற்காக ஈரான் பிரஜைக்கு 7 இலட்சம் ரூபா கொடுத்ததாகவும் குடிவரவு- குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக 

மேலதிக விசாரணைகளை குடிவரவு- குடியகல்வு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.