SuperTopAds

5 ஆண்டுகளில் 39 தடவைகள் வெளிநாட்டு பயணம், 23 மில்லியன் அரச பணம் செலவு..! நாடாளுமன்ற அதிகாாி சிக்கலில்..

ஆசிரியர் - Editor I
5 ஆண்டுகளில் 39 தடவைகள் வெளிநாட்டு பயணம், 23 மில்லியன் அரச பணம் செலவு..! நாடாளுமன்ற அதிகாாி சிக்கலில்..

2014ம் ஆண்டு தொடக்கம் இந்த ஆண்டு வரையான 5 ஆண்டுகளில் இலங்கை நாடாளுமன்றில் உள்ள உயா் அதிகாாி ஒருவா் அரச பணத்தில் 39 தடவைகள் வெளிநாட்டுக்கு சென்று வந்துள்ள மை கண்டறியப்பட்டிருக்கின்றது. 

இதற்காக அரசாங்கத்துக்கு சுமார் 23 மில்லியன் ரூபா செலவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. விமான டிக்கெட்டுக்காக 6.7 மில்லியன் ரூபாவும், பயண செலவுகளுக்காக 16 மில்லியன் ரூபாவும் இந்த தொகையினுள் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

குறித்த அதிகாரி கடந்த 2014 ‍ஆம் ஆண்டில் 7 தடவையும், 2015 ஆம் ஆண்டில் 5 தடவையும், 2016 ஆம் ஆண்டில் 7 தடவையும், 2017 ஆம் ஆண்டில் 8 தடவையும், 2018 ஆம் ஆண்டில் 10 தடவையும் மற்றும் இந்த ஆண்டில் இதுவரை இரு தடவையும் 

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜேர்மனி, நியூசிலாந்து, நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கே அவர் இவ்வாறு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அங்கு அவர் பல்வேறு பயற்சிப் பட்டறை மற்றும் 

கருத்தரங்குளில் கலந்து கொண்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.