போாின் அவலங்களை நோில் கண்ட முல்லைத்தீவு மாணவன் செயற்கை கை ஒன்றை உருவாக்கி சாதனை..!

ஆசிரியர் - Editor I
போாின் அவலங்களை நோில் கண்ட முல்லைத்தீவு மாணவன் செயற்கை கை ஒன்றை உருவாக்கி சாதனை..!

முள்ளிவாய்க்கால் போா் அவல பகுதிக்குள் வாழ்ந்த முல்லைத்தீவு- மல்லாவியை சோ்ந்த பல்க லைகழக மாணவன் ஒருவன் செயற்கை கை ஒன்றினை உருவாக்கி சாதனை புாிந்துள்ளான். 

மல்லாவியினை சேர்ந்த கணபதிப்பிள்ளை பத்மநாதன் அவர்களின் மகனான துசாபன் என்ற பல்கலைக்கழக மாணவனே இம் முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளார்.

2009 சனவரி 20 ஆம் திகதி சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார்கோவில் அருகாமையில் இடம்பெற்ற சிறிலங்கா படையினரின் எறிகணைத்தாக்குதலில் 

துசாபனின் தந்தையார் பத்மநாதன் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர். இதில் இருவர் கொல்லப்பட்டனர். அன்றைய நாள் இவரின் தந்தை மற்றும் ஏனையோரை 

உடையார்கட்டு மருந்தகத்தில் இயங்கி வந்த நட்டாங்கண்டல் வைத்தியசாலைக்கு உழவு இயந்திரம் மூலம் கொண்டு வரும்போது அவ்விடத்தில் நின்ற நான் (சுரேன்) 

இப்புகைப்படத்தினை எடுத்திருந்தேன். (துசாபனின் தந்தையை உழவுஇயந்திரத்தில் இருந்து இறக்கும் காட்சி)போரின் போது கண் முன்னே கண்ட அவல காட்சிகள் 

துசாபனின் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றது. மே 16 2009 வரை முள்ளிவாய்க்கால் பகுதியில் வசித்து வந்திருந்த துசாபன், போர்க்காலப்பகுதியில் கைகளை 

இழந்தவர்களுக்காக செயற்கை கைகளை உருவாக்கும் முயற்சியில் தனது நேரத்தினை கடந்த ஆண்டுகளில் செலவிட்டுள்ளார். 

சில மாதங்களுக்கு முன்னர் அதில் வெற்றியும் கண்டுள்ளார். தனது கல்வி முறுவுறும் நேரத்தில் கைகளை இழந்தவர்களுக்கு சென்றடையும் வகையில் 

செய்து கொடுக்க இருப்பதாகவும் மிகக்குறைந்த விலையில் எவ்வாறு செய்ய முடியும் என்று தற்பொழுது ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார். 

இவரது முயற்சிக்கு பாராட்டுக்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு