மறுதலிக்க முடியுமா ரவிகரனின் கருத்தை..? முல்லைத்தீவில் பம்மாத்து வேண்டாம், மாவட்ட செயலருக்கு திறந்த சவால்..

ஆசிரியர் - Editor I
மறுதலிக்க முடியுமா ரவிகரனின் கருத்தை..? முல்லைத்தீவில் பம்மாத்து வேண்டாம், மாவட்ட செயலருக்கு திறந்த சவால்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் திணைக்களங்கள், படையினர் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் உட்பட ஒட்டு மொத்தத்தில் 80ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா - ரவிகரன் தெரிவித்துள்ளார்.

எனினும் கடந்த 13.09.2019 அன்று, கிளிநொச்சியில் இடம்பெற்றுள் கலந்துரையாடலில், முல்லைத்தீவு மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் வெறுமனே 28,782 ஏக்கர் காணிகள் மாத்திரமே விடுவிக்கப்பட வேண்டும் என தவறான ஒரு விபரத்தை தெரிவித்துள்ளதாகவும் 

அவர் தெரிவித்துள்ளார். மேலும் நிலமின்றேல் இனமில்லை எனத் தெரிவித்த அவர், இவ்வாறான பொய்யான தரவுகளைக்கூறி, தமிழ் இனத்தினுடைய அழிவிற்கு வித்திடவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகசந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அ

ங்கு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,படையினருடையதும், திணைக்களங்களினாலும் அபகரிக்கப்பட்டிருப்பதுமான காணி விடையங்கள் சம்பந்தமாக 

கடந்த 13ஆந் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட செயலரால், முல்லைத்தீவில் விடுவிக்கப்படவேண்டிய காணிகளாக, 28ஆயிரத்து 782 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் 

என்ற விபரத்ததை தெரிவித்திருக்கின்றார்.அதில் படையினரிடம் 2278ஏக்கர் காணிகள் உள்ளதாகவும்,திணைக்களங்கள் வரிசையில் வனவளத் திணைக்களத்திடம் 1510 குடும்பங்களின் 3582.5ஏக்கர் காணிகளும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பிடியில் 

371குடும்பங்களின் 1453ஏக்கர் நிலம் உள்ளதாகவும்வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பிடியில், 21ஆயிரத்து 256 ஏக்கர் நிலம் உள்ளதாகவும்தொல்லியல் திணைக்களத்திடம் 28குடும்பங்களின் 212ஏக்கர் நிலம் உள்ளதாகவும்இவற்றின் அடிப்படயிலே 

மாவட்டத்தில் 28ஆயிரத்து 782ஏக்கர் நிலம் விடுவிக்கப்படவேண்டி இருப்பதை அந்த கூட்டத்தில் புள்ளிவிபர ரீதியில் சுட்டிக்காட்டியிருப்பதாக ஊடகங்களினூடாக அறியக்கூடியதாக இருந்தது.இது முற்று முழுதாக ஒரு பிழையான தகவல், 

தவறான புள்ளிவிபரம் என்பதை சில புள்ளிவிபரங்களினூடாக சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.முக்கியமாக வனஜீவராசிகள் திணைக்களம் நாயாறு மற்றும் நந்திக்கடல் இரண்டில் மாத்திரம் 8,606.02 ஹெக்டயர் நிலப்பரப்பு 

தங்களுடைய ஆளுகைக்குள் கொண்டுவந்திருக்கின்றனர்.இதனுடைய ஏக்கர் கணக்கினை பார்க்கும்போது 21,265.47 ஏக்கர் இந்த நந்திக்கடல், நாயாறு இரண்டு இடங்களிலும் மாத்திரமே அபகரிக்கப்பட்டிருக்கின்றது. இது தவிர கொக்குத்தொடுவாயை 

அண்டிய பகுதிகளான, வெள்ளைக்கல்லடி, கோட்டைக்கேணி, குஞ்சுக்கால்வெளி, தீமுந்தல், பணம்போட்டகேணி, அம்பட்டன் வாய்க்கால் போன்ற பகுதிகள் கூட வனஜீவராசிகள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கொக்கிளாய் முகத்துவாரத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தினுடைய விளம்பரப் பலகை போடப்பட்டுள்ளது, இப்படி பல இடங்களிலும் வனஜீவராசிகள் திணைக்களத்தினுடைய அபகரிப்பு அதிகமாக இடம்பெற்றிரக்கும்போது, 

வெறுமனவே 21,256ஏக்கர் நிலங்கள்தான் வனஜீவராசிகள் திணைக்களம் அபகரித்திருப்பதாக சொல்லப்பட்ட விடயம் தவறானது என்துடன், அப்பட்டமான பொய்த் தகவல் என்பதை சுட்டிக்காட்டுகின்றேன். இவ்வாறு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் 

வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்மூலமாகவும், பெயர்ப்பலகைகள் இடப்பட்டு அடையாளப்படுத்தப்படுள்ளதன் மூலமாகவும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் மிக அதிகமான காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது விடையம், படையினர் என்ற வகையிலே இராணுவத்திடம் அரச நிலம் 1694.5ஏக்கர் என்றும், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திடம் 51.5ஏக்கர் என்றும்இராணுவத்திடமுள்ள தனியார் நிலம், 114.75ஏக்கர் எனவும், கடற்படையினரிடமுள்ள 

தனியார் நிலங்கள் 48ஏக்கர்என்ற புள்ளி விபரம்,முல்லை மாவட்ட செயலரால் கொடுக்கப்பட்டிருக்கின்றது.குறிப்பாக கடற்படையினரிடம் உள்ள காணிவிபரம் தொடர்பில் பார்த்தோமானால், mul/dso/2014/003/1 என்னும் இலக்கமுடைய வரைபடத்திற்கு 

அமைவான அறிக்கயின்டி, கோத்தபாய கடற்படை முகாம் என்னும் ஒரு கடற்படை முகாமில் மாத்திரம், தனியார் காணி 379ஏக்கர், 2ரூட், 4பேச் தனியார் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. மாவட்ட செயலரால் 48ஏக்கர் தனியார் காணிதான் 

கடற்படையினரிடம் முல்லைத்தீவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட விடயம் முற்றிலும் பொய்யான தகவல் என்பதனைத் தெரிவித்துக்கொள்கின்றேன். முல்லைத்தீவில் கோத்தபாய கடற்படை முகாமில் மாத்திரம், அரசகாணிமற்றும் தனியார் காணியுமாக 

மொத்தம் 670ஏக்கர் காணிகளை அவர்கள் அபகரித்து வைத்திருக்கின்றனர். அதில் அரச காணி என சொல்லப்படுகின்ற காணிகள்கூட மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மூன்றாவது விடயமாக, 

தொல்லியல் திணைக்களத்திடம் 28குடும்பங்களின் 212ஏக்கர் நிலம் உள்ளதாக மாவட்ட செயலரால் கடந்த கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த 2013ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட அறிவித்தலின் பிரகாரம், 

வடமாகாணத்தல் 87இடங்கள் அபகரிக்கப்பட்ட நிலையில், அதிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 47இடங்களை தொல்லியல் திணைக்களம் அபகரித்துள்ளதை அறியக்கூடியதாகவுள்ளது.இதை விட இந்த 47இடங்கள் என்பதைத் தாண்டி 

கொக்கிளாய் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியும் காணப்படுகின்றது.இவ்வாறிருக்க வெறும் 212ஏக்கர்தான் தொல்லியல் திணைக்களம் அபகரித்திருப்பதாக மாவட்டசெயலர் கூறுவது, முற்றிலும் பொய்யான புள்ளிவிபரமாகும்.

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பிடியில் 371குடும்பங்களின், 1453ஏக்கர் நிலப்பரப்பு மாத்திரம்தான் உள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 2015.07.12ஆம் திகதிய மாவட்டச் செயலகப் புள்ளி விபரத்தின்படி, 

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அபகரித்துள்ள காணிகளாக, நீர்ப்பாசனங்களுடன் பயன்படுத்தக்கூடிய 523பயனாளிகளுடைய, 2,149ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட செயலக புள்ளிவிபரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையானது தங்களுடைய ஆளுகைக்குள் உள்வாங்கப்பட்ட காணிகளை இன்றுவரை விடவிக்கவேயில்லை. மேலும அபகரிப்பதையே தமது பணியாகக் கொண்டிருக்கின்றனர். இந்தவகையில் கொக்குத்தொடுவாய், 

கோட்டைக்கேணிப் பகுதியில், இந்த மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டதன் பின்பு 33பேருக்கு, தலா 25ஏக்கர் வீதம் காணிகள் தென்னிலங்கை வாசிகளுக்கு தோட்டச் செய்கைக்காக வழங்கப்பட்டிருக்கின்றன. 

இப்படியாக காணிகளை அபகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் வெறும் 28,782ஏக்கர் காணிகள்தான் விடுவிக்கப்பட இருப்பதென்பது முற்றிலும் பொய்யான புள்ளிவிபரமாகும். திணைக்களங்கள், படையினர் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் 

உட்பட ஒட்டு மொத்தத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில், 80ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.இவ்வாறாக மாவட்ட செயலர் பொய்யான தகவலைத் 

தெரிவித்திருப்பதை, மக்கள் பிரதிநிதி என்கின்ற வகையில் மிகவும் மன வேதனையுடன், இந்த பிழைகளைத் திருத்தம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.இப்படியாக குறைத்து பொய்யான தகவல்களை கூறுவதன் மூலம், 

எங்களுடைய மக்களின் வயிற்றில் அடிக்கின்றனர்.எமக்கு நிலம் இல்லாவிட்டால், எங்களுடைய இனமே இல்லாத நிலைக்குப் போய்விடும். தயவுசெய்து அதிகாரிகளோ, யாரோ சம்பந்தப்பட்டவர்கள் இப்படிய செயற்பாடுகளைச் செய்யவேண்டாம் 

எனக் கேட்டுக்கொள்கின்றேன். கொடுக்கும் தகவல்களில் தரவுகள் தெரியவிட்டால் தெரியாது என்று சொல்லுங்கள். அதை விடுத்து தவறான புள்ளிவிபரங்களை வழங்கி எங்கள் மக்களின் காணிகளை அபகரித்து, எமது இனத்தின் அழிவிற்கு 

வித்திடும் செயற்பாடுகளைச் செய்யவேண்டாமென தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு