புலி பூச்சாண்டிகளுக்கு சீ.வி.கே செருப்படி..! தியாகி திலீபன் யாா் என்றாவது தொியமா..? நான் திலீபனுடன் வாழ்ந்தவன்..

ஆசிரியர் - Editor I
புலி பூச்சாண்டிகளுக்கு சீ.வி.கே செருப்படி..! தியாகி திலீபன் யாா் என்றாவது தொியமா..? நான் திலீபனுடன் வாழ்ந்தவன்..

தியாகி திலீபனுக்கு நினைவுதுாபி கட்டியதற்காக என்னை சுட்டாா்கள். இந்தியாவுக்கு கைதியாக கொண்டு செல்லப்பட்டேன். ஆணையாளா் பதவியை இழந்தேன். இப்போது தாங்கள் புலிகள் என கூறும் பலா் அப்போது பிறக்கவேயில்லை. 

என வடமாகாணசபை அவைத்தலைவா் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளாா். இன்று காலை அவரு டைய இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கு ம்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். 

இதன்போது மேலும் அவா் கூறுகையில், வடக்கு மாகாண சபை ஆட்சியில் இருந்தபோதே நல்லூரி ல் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியை எல்லையிட்டு பராமரிக்க வேண்டும் என மா காண உள்ளுராட்சி அமைச்சர் என்ற வகையில் 

முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். அந்தக் கடி தத்தில் திலீபனின் தூபி உள்ள இடத்தில் பத்து அடி பகுதியை எல்லையிட்டு பாதுகாப்பு சுற்று வே லியை அமைக்குமாறு கோரியிருந்தேன். 

அனால் முன்னாள் முதலமைச்சர் எனது கோரிக்கையை நிராகரித்து நினைவு தூபி தவிர்ந்த நா ன்கு அடி பகுதியை சுற்றி எல்லை வேலி அமையுங்கள்.நினைவு தூபியில் எவ்வித முன்னேற்றங் ளையோ அபிவிருத்திகளை செய்வதை தடுக்கும் வகையில் 

பதில் கடிதம் ஒன்றை எனக்கு எழுதியிருந்தார். ஏன் அவ்வாறு பதில் எழுதினார் என்று எனக்கு விளங்கவில்லை. 1988 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி மீள புனரமைக்கப்பட்டு 

என்னால் திறந்து வைக்கப்பட்டது.அவ்வாறு திறந்து வைக்கப்பட்ட நான்கு நாட்களில் எனது அலுவகலத்தில் வைத்து என்மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டது.இதனால் இந்திய அமைதி காக்கும் படையினரால் பாதுகாப்பு கைதியாக என்னை 

இந்தியாவிற்கு கொண்டு சென்று விட்டனர்.பின்னர் சில காலம் கழித்து இலங்கை வந்தபோதும் என்பது ஆணையாளர் பதவியில அரச உத்தியோகத்தில் என்னால் பணியாற்ற முடியவில்லை. எனது வேலையை இழந்தேன். அப்போது எனக்கு வயது ஐம்பது 

இதனால் ஓய்வீதியத்தை பெற முயற்சிகளை எடுத்தேன். இதனால் எனது குடும்பத்தை கூட கொ ண்டு நடத்துவதில் மிகுந்த சிரமப் பட்டேன். தியாக தீபம் திலீபன் உயிருடன் இருந்த காலத்தில் கூட நான் அவருடன் நேரடியாக பேசியிருக்கிறேன்.

அவனுடன் ஒன்றாக வாழ்ந்திருக்கின்றேன். திலீபனின் வராலாறுகள் தியாகங்கள் இடம்பெற்று முப்பது வருடங்களாகிவிட்டன. இப்போது தாங்கள்தான் புலி வாரிசு என கூறிக்கொண்டு திரி பவர்கள் இந்த மண்ணில் பிறந்திருக்க மாட்டார்கள்.

அல்லது அவர்களுக்கு திலீபனை யார் என்று கூட தெரிந்திருக்குமோ தெரியவில்லை. திலீபனின் தூபியை அன்றைய காலத்திலேயே துணிந்து நின்று திறந்து வைத்தவன். அதனால் அறுபது வயதில் ஓய்வு பெற வேண்டிய நான் ஐம்பது வயதிலேயே 

ஒய்வு பெற வேண்டிய சூழல் கூட இதனால் ஏற்பட்டது. இவ்வாறு ஆரம்பகால வரலாற்றுடன் நேரடியாக தொடர்பு பட்டவன் என்ற அடிப்படையிலேயேயும் வரலாறுகள் மறைக்கப்படக் கூடாது என்பதாலேயே யாழ்ப்பாணம் மாநகரசபை இதனை 

பொறுப்பேற்க வேண்டும் என கோரினேன் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு